Feb 1, 2015

கூந்தல் உதிர்தலை தடுக்க !!!

கூந்தல் உதிர்தலை தடுக்க !!!


1.கடுகு எண்ணெய் ஒரு கப் கடுகு எண்ணையை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்து, தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால், முடி ஆரோக்கியத்தை பெரும்.




2.வெந்தயம் சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும். இந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டூம். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.


Jan 12, 2015

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை!

ஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை!
1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

நீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்!

நீங்கள் பிறந்த மாதமும் உங்கள் குணங்களும் பலன்களும்!

astro-month
நீங்கள் பிறந்த தமிழ் மாதத்துக்கான உங்கள் குணங்களும் பலன்களும்! தமிழ் மாதம் என்பது ஆங்கில மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகும். உதாரணமாக தமிழ் தை மாதம் என்பது ஆங்கிலத்தில் ஜனவரி 15 க்கும் பெப்பிரவரி 15 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியாகும்.
தை – (ஜனவரி 15 – பெப்பிரவரி 15) | மாசி – (பெப்பிரவரி 15 – மார்ச் 15) | பங்குனி – (மார்ச் 15 – ஏப்ரல் 15) | சித்திரை -(ஏப்ரல் 15 – மே 15) | வைகாசி – (மே 15 – யூன் 15)| ஆனி – (யூன் 15 – யூலை 15) | ஆடி – (யூலை 15 – ஆகஸ்ட் 15) | ஆவணி – (ஆகஸ்ட் 15 – செப்டெம்பர் 15) | புரட்டாசி – (செப்டெம்பர் 15 – அக்டோபர் 15)| ஐப்பசி – (அக்டோபர் 15 – நவம்பர் 15) | கார்த்திகை – (நவம்பர் 15 – டிசம்பர் 15) | மார்களி – (டிசம்பர் 15 – ஜனவரி 15)
தை மாதத்தில் பிறந்தவர்கள்
தை மாதத்தில் பிறந்தவர்கள் கஞ்சத்தனம் உடையவர்கள். ஒருவருக்கு பத்து காசு
செலவழித்தால் தனக்கு பத்து ரூபாய் வருமானம் வருமா என பார்த்து செலவு
செய்வார்கள். கடமையில் கெட்டிக்காரர்கள். உயர் அதிகாரிகளை கைக்குள்
வைத்துக்கொண்டு பணம் கொடுத்தாவது காரியத்தை சாதித்துக் கொண்டு

Nov 14, 2014

76 ஜோடி இரட்டையர்கள்: பார்த்தாலே பரவசம்

 
76 ஜோடி இரட்டையர்கள்: பார்த்தாலே பரவசம்
குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, சென்னை வேலம்மாள் பள்ளியில் 76 ஜோடி இரட்டை மாணவர்கள், ஒரே மேடையில் தோன்றி அசத்தியுள்ளனர்.
பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் குழந்தைகள் தினம் வித்தியாசமாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விளையாட்டுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தியது போக இரட்டையர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
76 ஜோடி இரட்டைகளும் ஒன்றாக தோன்றியது, பார்வையாளர்களை கவர்ந்தது. ஒரே மாதிரியான சீருடையில் இரட்டையர்கள் வந்திருந்தது, இரண்டு பேரில் யாருக்கு என்ன பெயர் என்று அடையாளம் காண முடியாதபடி இருந்தது.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு ஆடை அணிகலன் போட்டி, சிறந்த இரட்டையர்களுக்கான போட்டி, தனித்திறன் போட்டி, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Nov 10, 2014

முன்னாள் மாவட்ட நீதிபதி (விகடகவி ) திரு .முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்

முன்னாள் மாவட்ட நீதிபதி (விகடகவி ) திரு .முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்
பிரபல வழக்கறிஞரும் ,முன்னாள் நீதிபதியும் சிறந்த மேடைப்பேச்சாளரும்விகடகவி என்ற புனை பெயரில் பல கவிதைகளை எழுதியவரும் சமூக சேவையாளரும் சமய சொற்பொலி வாளரும் எல்லோரையும் சிறியவர் பெரியவர் என்ற வித்தியாசமின்றி அன்புடன் பழகுபவரும் அரசியலிருந்து ஒதுங்கி இருந்தாலும் தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கும் முத்தையா திருநாவுக்கரசு அவர்கள் தனது 75 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் இறுதி கிரிகைகள் நடைபெற்று புதன் கிழமை 12.11.2014 அன்று பிற்பகல் 2மணியளவில் தகனக் கிரிகைக்காக எடுத்து செல்லப்படும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

Nov 2, 2014

மருத்துவ செய்தி என்றென்றும் இளமையாக இருக்க வேண்டுமா?




அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
இளமை என்று ஒன்று இருந்தால், நிச்சயம் முதுமையும் வரும்.
ஆனால் அத்தகைய முதுமை, இளமை காலத்திலேயே வந்தால் தான் மிகவும் கஷ்டம்.
நிறைய பேர் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், இதற்காக நிறைய ஆன்டிஏஜிங் கிரீம்களை பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும் அதற்கான பலன் சிறிது நாட்கள் மட்டும் தானே தவிர, முதுமை வயது எட்டும் வரை நீடிப்பதில்லை.
ஆனால் இந்த பிரச்னைக்கு உணவு,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...