Feb 8, 2013

கூகுளின் Chrome மற்றும் Firefox இடையே வீடியோ கோல் பேசும் வசதி அறிமுகம்
February 6, 2013
இணைய உலாவிகளின் வரிசையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடங்களில் இருக்கும் கூகுளின் Chrome மற்றும் Mozilla நிறுவனத்தின் Firefox ஆகிய உலாவிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் ஒரு உலாவியிலிருந்து மற்றைய உலாவிக்கு வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு முன்னணி நிறுவனங்களிடையேயும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட WebRTC எனும் இத்தொழில்நுட்பமானது துல்லியமான ஒலி பரிமாற்றம் மற்றும் உயர் ரக வீடியோ காட்சிகளின் பரிமாற்றம் என்பனவற்றினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
இந்நவீன தொடர்பாடலினை தமது பயனர்களுக்கு விளக்கும் நோக்கில் இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து டெமோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளன

இணைய பயன்பாட்டில் நொக்கியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது அப்பிள்!

News Service உலகம் முழுவதும் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்துவது அடிப்படையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டில் செல்ஃபோனில் இணைய தளம் பயன்படுத்தியதில் நோக்கியா நிறுவன தயாரிப்புகள் 37.67 சதவீத இடத்துடன் முதலிடத்தில் இருந்ததாக ஸ்டாட் கவுன்டர் (StatCounter) என்ற இணைய தள ஆய்வு நிறுவன புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. அதை இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளி, முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.ஜனவரி நிலவரப்படி உலக அளவில் இணைய தள பயன்பாட்டில் 25.86 சதவீதத்துடன் ஆப்பிள் முதலிடத்தில் இருப்பதாக தெரிய

பூமியின் தோற்றத்தை விண்வெளியிலிருந்து புகைப்படம் எடுத்து அனுப்பிய விண்வெளிவீரர்!

News Service பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
  

81வது சதம்! 25,000 ரன்கள் சச்சின் புதிய சாதனை

வெள்ளி, 8 பிப்ரவரி 2013

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான 5 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்று முன் சதம் எடுத்தார். அவரது 81வது சதமாகும் இது! சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்.

முதல் தர கிரிக்கெட்டில் 303வது போட்டியில் ஆடும் சச்சின் 25,001 எடுத்து மற்றொரு சாதனை புரிந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.

139 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் எடுத்த சச்சின் தற்போது 106 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் சவான் 40 ரன்களில் விளையாடி வருகிறார்.

526 ரன்களைத் துரத்தி வரும் மும்பை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ரோஹித் சர்மாவை 0-வில் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார், ஏற்கனவே ரகானேயை வீழ்த்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கேப்டன் ஹர்பஜன் சிங்.

பாண்டே 2, ஹர்பஜன் 2, ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
மேலும் படிக்க

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...