சித்தர்கள்,
முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் காடுகளிலும், மலைகளி லும், வனங்களிலும்
குடில் அமைத்தும்,குகைகளிலும் தவம் இயற்றி வாழ்ந்து வரும் காலங்களில் கொடிய
மிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களின் இடர் பாடுகளில் இருந்து காத்துக்
கொள்ள, கட்டுக்குள் கொண்டு வர பல அதிசய மூலிகைகளையும், சூட்சும
மந்திரங்களையும் கையாண்டு வந்துள்ளனர்.
அவைகளில் ஒன்றுதான் "பொன் ஊமத்தை" என்ற மூலிகை ஆகும். இம் மூலிகையைப் பற்றிய அகத்தியர் பெருமான் பாடல்...
காணவே பொன்னி னூமத்தை மூலி
கருவான மூலியடா கந்தர் மூலி
பாணமாம் பச்சையது தழையினாலே
பாருலகில் சொர்ணமதைக் காணலாகும்
தோணவே சாரதனைப் பிழிந்துமல்லோ
தோராமல் ரவிதனிலே காயவைத்து
மாணவே செம்புருக்கி கிராசமீய
மன்னவனே பசுமையடா தங்கந்தானே
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா