கொழும்பு முகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ பூமி நீளா பத்மாவதி ஸமேத ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு தேவஸ்தான வசந்தோற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
இவ்வாலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை தினமும் காலை 5 மணி முதல் அப்ரயாத பூஜை, சந்திப் பூஜை, உற்சவ மூர்த்திக்கு நவகலச ஸ்நபனா அபிஷேகம், மூலவருக்கு விசேட பூஜை, வசந்த மண்டபப் பூஜை என்பவற்றுடன் நண்பகல் 12.30 மணிக்கு உச்சிக் காலப் பூஜை நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பல்லக்கிலும் நாளை 4ஆம் திகதி காலை சிம்ம வாகனத்திலும் மாலை அன்ன வாகனத்திலும் 5ஆம் திகதி காலை கற்பக விருட்சக வாகனத்திலும் மாலை கருட வாகனத்திலும் 6ஆம் திகதி காலை மோகினி அவதாரத்திலும் மாலை சர்ப்ப (சேஷ) வாகனத்திலும் 7ஆம் திகதி காலை அனுமான் வாகனத்திலும் மாலை யானை வாகனத்திலும் 8ஆம் திகதி காலை சூரியப்
பிரவையிலும் மாலையில் சந்திரப் பிரவையிலும் 9ஆம் திகதி காலை குதிரை வாகனத்திலும் மாலை தங்கத்தேரிலும் எழுந்தருளி பவனி வந்து திருவருள் பாலிப்பார்.
எதிர்வரும் 10ஆம் திகதி காலை 7.05 மணிக்கு இரதோற்சவம் ஆரம்பமாகும். அன்று இரவு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் எம்பெருமான் தேரில் எழுந்தருளி மறுநாள் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு விசேட பூஜைகளைத் தொடர்ந்து தேர்பவனி மீண்டும் ஆரம்பித்து மாலை வந்தடையும். அன்னதானம் வழங்கப்படும்.
மாலை 4 மணி முதல் சாயரட்சை பூஜை, உற்சவ மூர்த்திக்கு நவகலச ஸ்நபனா அபிஷேகம், திருவூஞ்சல் சேவை, மூலவர் விசேட பூஜை, வசந்த மண்டப பூஜை என்பவற்றுடன் பள்ளியறை பூஜை நடைபெறும்.
கடந்த 30ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இவ்வாலயத்தில் மகா கணபதி ஹோமம், விஷ்வக்ஷேனர் வழிபாடு, எஜமான் சங்கல்பம், புண்ணியாக வாசனம் அனுக்ஞை, வாஸ்து சாந்தி என்பன நடைபெற்றன.
இவ்வாலய உற்சவத்தை யொட்டி சுவாமி தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். சுவாமி இன்று 3ஆம் திகதி காலை யானை வாகனத்திலும் மாலை முத்துப் பல்லாக்கிலும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவ்வாலயத்தில் தினமும் 12.50 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.
ஆலயத்திலிருந்து புறப்படும் தேர் முகத்துவாரம் வீதி, அளுத்மாவத்தை வீதி, கொச்சிக்கடை, செட்டியார் தெரு, மெயின் வீதி, 3ம் குறுக்குத் தெரு, 2ம் குறுக்குத் தெரு, கெய்ஸர் வீதி, மல்வத்த வீதி, 1ம் குறுக்குத்தெரு, ஸ்ரீ கதிரேசன் வீதி, சங்கமித்த மாவத்தை, ஜோர்ஜ் ஆர். டி சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை வீதி, கொலெஜ் வீதி, அளுத்மாவத்தை வீதி, முகத்துவாரம் வீதி வழியாக ஆலயத்தை வந்தடையும்.
எதிர்வரும் 12ஆம் திகதி காலை 8.30 மணிக்கு மஹா தன்வந்திரி ஹோமமும் 11.30 மணிக்கு மஹா சுதர்ஷன தீர்த்தோற்சவமும் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் விடையாற்றியும் நடைபெறும்.
No comments:
Post a Comment