இன்று வியாழக்கிழமை மாலை 16h00 மணியிலிருந்து சனிக்கிழமை காலை 7h00
மணி வரை பின்வரும் 27 பிராந்தியங்களில் கடும் புயல் மழை பெய்யலாம் என
செஞ்சிவப்பு எச்சரிக்கை (Alerte Orange) விடப்பட்டுள்ளது. கடுமையான காற்று
அல்லது மிகவும் கடுமையான மழையின் தாக்குதல் மோசமான விளைவுகளை உண்டுபண்ணலாம்
என Météo France எச்சரித்துள்ளது.
முக்கியமாக இப்பகுதியிலுள்ள மக்களும் பொழுது போக்கு மற்றும் சிறுவர்
விடுமுறை இல்லங்களும் (activités de loisirs) மிக அவதானமாக இருக்க வேண்டும்
எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்தச் சமயத்தில் தொலைபேசிகளையும்
செல்பேசிகளையும் இலத்திரனியல் மற்றும் மின் உபகரணங்களையும் உபயோகிப்பதைத்
தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் விடப்பட்டுள்ளது.
Ile-de-France இனை இப் புயல் மழை வியாழன் நள்ளிரவின் இரண்டாம்
சாமத்திலும் வெள்ளிக்கிழமை அதிகாலையும் தாக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Seine-Saint-Denis
(93) பிராந்தியத்தில் வசிப்பவர்களுக்கு பொபினி Préfecture புதிய
அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதன் மூலம் அதிகாலையிலேயே வரிசையில் நிற்க
வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது.
*உங்களுக்குரிய 1 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 1 an)
*உங்களுக்குரிய 10 வருட வதிவிட உரிமை அட்டையைப் புதுப்பிக்க (Titre de Sejour 10 ans)
*5 வருடங்கள் 1 வருட வதிவிட உரிமை பெற்று அதனை 10 வருட வதிவிட உரிமை அட்டையாக மாற்ற (Passage en 10 ans)
*உங்கள் வதிவிடத் தகுதி நிலையை மாற்ற (Changement de statut)
*வேறு பிராந்யத்திலிருந்து 93ற்கு விலாசம் மாற்ற (Changement d'adresse - aute département)
*உங்கள் பெயர் மாற்ற (Modification du nom)
*தொலைந்த வதிவிட உரிமை அட்டைக்கு மாற்றீடு அட்டை பெற (Duplicata)
நீங்கள் Préfecture நாடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில்
www.seine-saint-denis.gouv.fr எனும் இணையத்தள முகவரியில் உங்களுக்குரிய
பகுதியில் பதிவு செய்து அதற்கான விண்ணப்பத்தை இணையத்தளத்திலேயே நிரப்பி
அனுப்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சந்திப்பிற்காகன நேரமும்
(RDV) கொண்டு வரவேண்டிய ஆவணங்களின் விபரமும் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் வதிவிட அட்டை முடிவதற்கு மூன்று மாதங்களிற்கு முதல் அனுப்பபடும் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இதன் மூலம் உங்கள் நேரம் மிச்சப்படுத்தப்படுவதோடு உங்களுக்கான
சந்திப்பு நேரமும்; வழங்கப்படுவதால் உங்கள் காத்திருப்பு நேரமும்
மிச்சப்படுத்தப்டுகின்றது உங்கள் புதிய வதிவிட உரிமை அட்டை தயாரானவுடன்
உங்களுக்கு அது குறுஞ் செய்தி மூலமும் அனுப்பி வைக்கப்படும் என Préfecture
de Bobigny தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் தேசம் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச்
சின்னங்களாலும் அரண்மணைகளாலும் தன் வீரத்தினையும் சிறப்பு மிக்க வாழ்வையும்
இன்றும் சான்றாகக் கொண்டு மிளிர்ந்து நிற்கும் ஒரு தேசமாகும். அழகு மிக்க
இந்த நாடு தன் பண்டைய மற்றும் நவீனக் கட்டக் கலையாலும் இயற்கை அழகுகளாலும்
உலக மக்கள் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின்
காதல் தேசமாகப் பிரான்சும் அதன் கலாச்சாரமும் அனைவரையும் தன் பால்
ஈர்த்துள்ளது. பரிஸ்ம் அதனை அண்மித்த புறநகர்ப் பிரதேசங்களும் பெருமளவான
சுற்றுலாப் பயணிகளைத் தம் பால் வசீகரிக்கும் அழகும் வரலாறும் உடையவை.
அவற்றின்முக்கியமான பகுதிகள் சிலவற்றை உங்கள்கோடை விடுமுறைக்குக் கண்டுகளிக்க இலகுவாக நாம் இங்கே தருகின்றோம்.
இந்தச் சுற்றுலாவின் முதற்கட்டமாக விபரமாக நாம் பின்வபவற்றைச் சில நாட்களிற்குப் பார்ப்போம்.
1. ஈபிள் கோபுரம்.
2. லூவ்ர் அருங்காட்சியகமும் அதன் தோட்டங்களும் பிரமிட்டும்
3. Notre dame de Paris Njthyak; (Our Lady of Paris)
4. ஒப்பேராவும் அதன் சுற்றுப்புறமும்
5. இருதய நாதர் தேவாலயம் (White Church - sacre coeur de montmartre)
மாம்பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன் ஆயுளையும் நீடிக்கச் செய்யும்.
இப்பழங்களின் பூர்வீகம் இந்தியாவாகும். மாம்பழம் பொதுவாக கோடைக் காலத்தில்
அதிகம் விளையும். நன்கு கனிந்த மாம்பழத்தை உண்பது நல்லது. மாம்பழம்
உடலுக்கு உஷ்ணம் தரும் பழம் தான்.
ஆனால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள உஷ்ணத்தை விட குறைவு.
மாம்பழத்தை உணவோடு சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெறும்
வயிற்றில் சாப்பிடக் கூடாது. உணவு உண்டபின் 20 நிமிடம் கழித்து சாப்பிடுவது
நல்லது.
காலை உணவு முடித்து 30 நிமிடங்களுக்கு பின் 50 கிராம் மாம்பழச்சாற்றுடன்
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, அவை ஒத்துக்கொள்ளாமல், சிலர் ஜலதோஷம்
மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு
தன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். நம் உணவு முறைகளின் மூலமே உடலின்
நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க முடியும்.
வைட்டமின் ஏ, சி, இ:
வைட்டமின் ஏ (பீட்டா-கரோட் டீன்), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ
ஆகியவை உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு தன் மையை அதிகரித்து, உடலுக்கு
தீங்கு விளைவிக்கும் காரணிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கேரட், பச்சைக் காய்கறிகள், தக்காளி, செர்ரி, நெல்லிக்காய், சிட்ரஸ்
பழங்கள் மற்றும் கொய்யாப்பழம் ஆகியவற்றில் இந்த சத்துக்கள் அதிகளவில்
உள்ளன. உடலின் ஆரோக்கியம் மற்றும் பலத்தை பேண, தினமும், ஐந்து பாதாம்
பருப்பு சாப்பிட்டு வரலாம்.
ப்ரோபயாட்டிக்:
தயிர் மற்றும் பால் சார்ந்த சில பொருட்களில் காணப்படும் நன்மை செய்யும்
பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். இவை உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குடலில், நோய் எதிர்ப்பு சக்தியை
அதிரிக்கும் என்சைமான, இம்யுனோகுளோபின் அதிகளவு சுரக்க, ப்ரோபயாட்
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள்,
காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள்.
பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக
தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். ஏனோ தானோ வென்று
விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே
பிரச்சினையாகிவிடுகிறது.
கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில்
கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும். இதனுடன் திரிபலா
சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும். கண்
பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை
சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப்
பயன்படுத்தலாம்.
நீர்ப்பிரமி கொடி வகையைச் சார்ந்தது. நீர் நிலை ஓரங்களில் படர்ந்து வளரும்.
இதன் இலை பூண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இது இனிப்பு,
துவர்ப்புத் தன்மை கொண்டது. இந்தியா எங்கும் பரந்து காணப்படும். மலேசியா,
இந்தோனேசியா, பர்மா, இலங்கை நாடுகளிலும் காணப்படுகிறது. நீர் பிரம்மி
செடியில், ஸ்டீரால் மற்றும் Herpestine, Brahmine என்னும் ஆல்கலாய்டுகளும்,
Bacoside A, Bacoside B ஆகிய குளுக்கோசைடுகளும் உள்ளன.
நினைவாற்றலைத் தூண்ட
பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக மறதி ஒரு
பெரும்பிரச்சனையாகவே இருந்து வருகிறது. ஞாபக மறதி ஒரு தொற்று நோய்க்குச்
சமமாகும். இதனை போக்கும் அருமருந்துதான் நீர்பிரம்மி. நீர்பிரம்மி இலைகளை
நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளைகளில்
சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல்
ரத்தத்தில்
கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள்
அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ஹீமோகுளோபினை
அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி
பெறலாம்,
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை
நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில்
பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து,
கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.
இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில்
வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை
ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து
விடலாம்.
மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம்
சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள்
இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு
அணுக்கள் அதிகரிக்கும்.
மனிதர்கள் உணவு பழக்கத்தால் ஏற்படும் நன்மை � தீமை பற்றி சமீபத்தில் ஒரு
கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அப்போது உலகம் முழுவதும் பெரும்பாலானவர்கள்
காலை உணவு சாப்பிடுவதில்லை என்று தெரிய வந்தது. மது அருந்துபவர்கள், புகை
பிடிப்பவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய
உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் உள்ளனர் என்றும்
தெரிந்தது. காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு
ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்
கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.
அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம்
பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. இது இதய நோய்களை கொண்டு வந்து விடும் என
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை
முடித்து விட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். காலை உணவை
தவிர்த்தால் உடல் பருமன், உயர்ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய
பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான்
சிறுநீரகம். ஒரு மனித சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம். 12
செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொண்டதாக ஒவ்வொரு சிறுநீரகமும்
இருக்கும். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவும் மிகவும்
முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம்
பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
சிறுநீரகத்தின் செயல்களை எண்ணிப் பார்த்தோமானால் நமக்கு
இறைவனின் மீது நிச்சயம் ஒரு மதிப்பு வரும். அந்த அளவிற்கு
சிறுநீரகத்தின் பணி அமைந்துள்ளது. உடலில் பல்வேறு
நடவடிக்கைகளை கவனிக்கிறது இந்த சிறுநீரகங்கள். பொதுவாக ஒரு
மனிதனுக்கு இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஆனால் ஒரு மனிதன்
வாழ ஒரு சிறுநீரகமே போதுமானதாகக்
மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!
உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும்
அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில்
கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள
தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த
ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள்,
பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம்
ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள்
கணனியின் மத்திய செயற்பாட்டகம் அல்லது மையச்செயலகம்(central processing unit - CPU)
என்பது ஓர் கணனியின் மூளை என்றே கூறலாம். கணனியில் செயற்படுத்தப்படும்
மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும்.
இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர்
ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து
செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்... இவற்றின் பங்கு
இன்றியமையாதன. அத்துடன்
கணனியின் அதிகமான விடையங்களை செயற்படுத்தும் அல்லது தீர்மானிக்கும் அடமாகவும் இதுவே விளங்குகின்றது. இந்தப்பெயர் 1960 களில் இருந்து கணனித்
தொழில்நுட்பத்தில்
கையாளப்பட்டுவரும் ஒன்றாகும். ஆனால் இன்று உள்ள மையச்செயலகங்கள்
பெருமளவிற்கு தமது வடிவம் மற்றும் செயற்றிறன் கட்டமைப்புக்களில்
மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து
கணனியென்பது தனியொரு உபகரணமல்ல. மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும்
இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணனிகள் பார்வைக்கு தனியொரு
கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும்
வெளியேயும் பல பகுதிகள்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா