டிப்ஸ்:கணினியில் வேலை செய்கிறீர்களா?
பெரும்பாலான
அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க
வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால்
டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள்
ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார்
சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
*
காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத்
தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து
கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன்,
உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
*
நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும்
வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்'
நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு
அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில்
இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
*
முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில்
முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான
ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத்
தவிர்க்கலாம்.
*
பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு
ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை
ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச்
செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில்
சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை
உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம்
இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக்
கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான
பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி
இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால்
உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
*
கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக்
கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க
அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக்
கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால்
கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால்
ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும்
பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி
ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள்
எரிச்சலடைவதைத் தடுக்கும்.
*
உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய்
பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில்
அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா,
முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை
சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும்
அதிக சக்தி கொடுக்கும்.
*
இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு
ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள்.
இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது
காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய
தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன்
உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்
உங்கள்
கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து
மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று
விரும்புகிறீர்களா?
அதற்கு
இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில
இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1.
உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account)
கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக
இருக்கும்.
2.
இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right
Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt
அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3.
கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4.
பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை
என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை
தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private
ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே
ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில்
நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக
ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக
கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை
மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File
தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல்
பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password
பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே
கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்
- வீடியோக்களை எடிட் செய்வதற்கு
வீடியோக்களை எடிட் செய்வதற்கு Daniusoft Video Studio Express என்ற மென்பொருளானது உதவுகிறது.
முதலில்
தரவிறக்க சுட்டியை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் பேஸ்புக்
தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர்
மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக்
செய்யவும்.
கிளிக்
செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில்
முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின்
உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும்.
அதில்
கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும்
கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை
பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam
மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து
நிறுவிக்கொள்ளவும்.
இந்த
மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எளிமையாக எடிட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad ஆகிய
சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த
மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில்
வேலை செய்ய கூடியது ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல்
பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.
உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?
அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?
ஆனால்
ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த
நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு
போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே
உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள்
பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை
செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான
நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட புகைப்படங்களை இந்த மென்பொருளின்
மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த
மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று
முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு
போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில்
வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன்
மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த
மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும்
மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது.
நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க
முடியும்.
தரவிறக்க சுட்டி - http://www.picget.net/photoshine-photo-editor/download.htmlஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய |
நாம்
இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றோம். ஒரு சில
வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணனியில் சேமித்து
கொள்ளலாம் என்று தோன்றும்.
இதனை பயன்படுத்த
1. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
2. இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
3. இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்கபட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
4. அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
5.
அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT)
தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION
என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
6. அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும்.
7.
அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக
தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.
|
No comments:
Post a Comment