Apr 25, 2012

கடுக்காய்

மருத்துவக் குணங்கள்:

    கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
    திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய

நித்திய கல்யாணி

மருத்துவக் குணங்கள்:
  1. நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தாம். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். அரிய உள்ளடக்கங்கள் மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான்.

உலர்ந்த திராட்சை



மருத்துவக் குணங்கள்:

    ஆரம்ப காலத்தில் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்ததால் இதற்கு கிஸ்மஸ் பழம் எனப் பெயரிட்டனர். பொதுவாக இந்தப் பழத்தை கேக், பாயாசம், பிஸ்கட் என்று பலகார வகைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
    இதில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது தான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
    உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும்.
    குழந்தைகளுக்கு எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கல்சியம்தான். கல்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது.
    இரத்த விருத்திக்கு எலும்பு மச்சைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மச்சைகள் பலமடைந்து இரத்தம்

நன்னாரி


மருத்துவக் குணங்கள்:

    இந்தியாவில் எங்கும் வளரும் கொடி வகையைச் சேர்ந்தது. எதிரடுக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இந்த வேரின் மேற்புரம் கருமை நிறமாகும். உள்ளே வெண்மை நிறமாகவும், நல்ல மணமுடைய தாகவும், வாயிலிட்டுச் சுவைக்க சிறிது கசப்பாகவும் இருக்கும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
    சித்த மருத்துவத்தில் இதன் வேர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு

தொட்டாற் சுருங்கி

மருத்துவக் குணங்கள்:

    தொட்டாற் சுருங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.
    இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.
    சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
    இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு

சிலந்தி நாயகம்


மருத்துவக் குணங்கள்:

    சிலந்தி நாயகம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் காணப்படும். முக்கியமாக சாலையோரங்களில், ஆற்றங்கரைகளில், ஈரமான களிமண் நிலங்களிலும் அதிகமாகக் காணப்படும். இதன் பிறப்பிடம் இந்தியா, மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா. இது ஆசியாவிலிருந்து வட ஆப்பிரிக்காவுக்குப் பரவியது. பசிபிக் தீவிலும் காணப்படும். இது ஒரு தரையில் படரக்கூடிய சிறு செடி. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ பச்சை இலைகளையுடையது. இதன் பூக்கள் நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிறங்களைக் கொண்டது. இதன் பூக்களுக்கு தேனிக்கள் அதிகமாக வரும். இதனால் மகரந்தச் சேர்க்கை உண்டாகும். இந்தப்பூ பட்டாம் பூச்சிகளை இழுக்கக் கூடிய சக்தியுடையது. வெடித்துச் சிதறக்கூடிய முற்றிய காய்களையுடையது. இதன் காய்ந்த காய் வெடிக்கும் போது சுமார் 18 அடி தூரத்தில் விதைகள் சிதறும். விதைகள் மரக்கலரில் இருக்கும். இதனை வெடிக்காய் செடி எனவும் அழைப்பார்கள். கட்டிங்
    இந்தோனீசியாவில் இதன் இலைச்சாறு,

Apr 24, 2012

சந்தனம்

மருத்துவக் குணங்கள்:

    தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது. இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப் பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப் பழத்தைப் பறவைகள்

கானா வாழை

மருத்துவக் குணங்கள்:

    கானா வாழையின் பிறப்பிடம் ஆசியா, ஆப்பிரிக்கா. தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இது பயிர்களில் களையாக வளரக்கூடியது. இதன் இலைகள் முட்டையாக ஈட்டி வடிவில் அமைந்திருக்கும். இலைகள் மென்மையாக பச்சையாக தண்ணீர் உள்ள சதைப்பற்றை உடையது. இது தரையோடு படர்ந்து மேல் நோக்கி வளரும் சிறு செடி. இதன் மலர்கள் நீல நிறமாக சிறிதாகக் காணப்படும். கீரையை பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் சமைத்துண்ணலாம். விதை மூலம் இன விருத்தியாகிறது.
    கானா வாழையை சீனா மக்கள் மூலிகையாகப் பயன்படுத்தினர். பாக்கீஸ்தானில் தோல் வியாதியால் ஏற்படும் வீக்கம் குறைக்கப் பயன்படுத்தினர். தொழுநோய் புண்களை சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு

புளியாரைக் கீரை



மருத்துவக் குணங்கள்:

    மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது.  கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
    புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
    புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.
    சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.
    அஜிரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால்

சங்கிலை

மருத்துவக் குணங்கள்:

    சங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரை, கடற்கரைகளிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில் பரவிற்று.  இது 8 மீட்டர் வரை வளர்ந்து படரக்கூடியது. இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். கூர்மையான நுனிகளையுடையது. இலை கோணங்களில் நீண்ட நான்கு முட்களையுடையது. முட்கள் 5 செ.மீ. நீளமுடையது. இதன் பழங்கள் மஞ்சளாக இருந்து பின் வெள்ளையாக மாறும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
    சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும்,

கட்டுக்கொடி



மருத்துவக் குணங்கள்:

  1. கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய் காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...