நம் முன்னோர்கள் சளி, ஜுரம், தலைவலி போன்றவை தம்மை அணுகாமல் ஆரோக்கியமாக
உடலையும், மனதையும் காக்கும் வழி முறைகளை அறிந்திருந்தனர். உடலுழைப்பின்
சிறப்பை செவ்வனே அறிந்திருந்த அவர்கள் நவீன உலகில் நாம் சந்திக்கும் அனேக
பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அறிந்திருக்கவில்லை. சமையலறையில் நாம்
தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுடன், கடைகளில் எளிதாகக் கிடைக்கும்
ஆயுர்வேத மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டு மருத்துவரிடம் செல்வதை
கூடுமானவரையில் தவிர்த்து வந்தனர். அவற்றில் அடுத்து வரும்
தலைமுறையினருக்குப் பயன்படும் என்று நினைத்து சில குறிப்புகளை எழுதுகிறேன்.
கண்டந்திப்பிலி பொடிகண்டந்திப்பிலி எனப்படும் இக்குச்சிகள் ' தாசவரம்
குச்சிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. இதை வாங்கி வறுத்து சுடு சாதத்துடன்
நெய் விட்டு உண்ண குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டைக்கட்டு, எரிச்சல்
முதலியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம். .
தேவையான பொருட்கள்:கண்டந்திப்பிலி குச்சிகள் - 25 gms,பெருங்காயம் -
சிறிது, சிகப்பு மிளகாய் - ஐந்து,சுவைக்கேற்ப - சிறிது புளி, உப்பு
.செய்முறை:எண்ணெய் விடாது எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்துக் கொண்டு
ஒன்றாக இடித்துக் கொண்டு சலித்து உபயோகிக்கவும்.
சுக்குத்தண்ணீர்இரண்டு பெரிய துண்டு சுக்குடன் இரண்டு ஏலக்காய் முதலியவற்றை
நசுக்கிக் கொண்டு ஒரு தேக்கரண்டி ஜீரகம் இரண்டு கப் தண்ணீரைச் சேர்த்துக்
கொதிக்க வைத்து முக்கால் கப்பாக நீர் குறைந்தவுடன் பனை வெல்லம் அல்லது
வெல்லம் சேர்த்துக் குடித்தால் அஜீரணம், பசியின்மை, உடல் வலி நீங்கும்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா