ஆல்ரவுண்டர் திராட்சை:
திராட்சை
கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு
கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது
பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள ‘குளுக்கோஸ்’ விரைவில் ரத்தத்தை
அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும்,
மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.
மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள்
இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை
‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான். இரத்த வாந்தியை இது
நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல
பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய்
திகழ்கிறது.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா