Jul 30, 2012

பெண்களுக்கு இதயப் பிரச்சனை எப்போது வரும்


இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது.
 பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.
மாதவிடாய் நின்றவுடன்...:   பொதுவாக பெண்களைவிட ஆண்கள் 10 ஆண்டு முன்னதாகவே இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நிலை வரும்போது இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
  மாதவிடாய் நிற்கும்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற

Jul 29, 2012

என்றென்றும் இளமையாக இருக்க


என்றென்றும் இளமையாக இருக்க சில டிப்ஸ்!பொதுவாக அனைவருக்குமே தாம் எப்பொழுதும் இளமையோடும், அழகாகவும் இருக்கவேண்டும் என்ற ஆசையிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு கனவாகவே இருக்கும். சரி இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈஸி!
தினமும் காலை 5 மணிக்கு எழுந்து பழகுங்கள். எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பின்பு அரை மணி நேரம் யோகாசனம் செய்யுங்கள். மிகவும் எளிதான உங்களுக்குத் தெரிந்த யோகாசனம் செய்தால் போதும். காலை 8 மணிக்குள் ஆவியில் வேகவைத்த உணவை சாப்பிடுங்கள்.
பின்பு 11 மணிக்கு ஏதாவது ஒருவகை கீரை சூப் சாப்பிடுங்கள். மதியம் 12 முதல் ஒரு மணிக்குள் மதிய உணவு சாப்பிடுங்கள். கொஞ்சம் சாதம், நிறைய

Jul 28, 2012

2012 மே இல் தான் உலக வரலாற்றில் அதி கூடிய வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டுள்ளது


இந்த வருடத்தின் மே மாதம் தான் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவாகிய மாதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.
1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய காலநிலை தரவு மையம் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, விவசாயம் போன்றன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக

நலம் தரும் ஜாதிக்காய்---இய‌ற்கை வைத்தியம்


முகத்தை அழகாக்கும்:

ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.


அம்மை கொப்புளங்கள் சரியாகும்:


அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி

தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து



1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்


21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்

வணக்கம் நண்பர்களே..! மனிதர்கள் சந்திக்கும் நோய்கள் பல. அவற்றை தீர்க்க எத்தனையோ வித மருத்துவ முறைகளை கையாள்கிறோம். சில நோய்கள் விரைவில் குணமடையும். சில நோய்கள் குணமடைய நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும். ஒரு சில நோய்கள் தீர்க்கப்படாமலேயே இருக்கும். இதைத் தீராத வியாதிகள் என்பர். நமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய இயற்கை மூலிகைகளிலிருந்து உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். அவற்றில் 21 வகையான மருத்துவமுறைகளை இங்கு பதிந்துள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள். நன்றி..!

அருகம் புல் சாறின் அருமை:
ஆபத்துக்கு உதவுவது அருகம்புல். திடீர் வண்டுக்கடி, அலர்ஜி(Allergy) என்ற

நீரிழிவுக்கு கறிவேப்பிலை!!! சிறந்த மருந்து


நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும்.

உடல் சிலிம் ஆக வேண்டுமா


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்.

வழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.---அழகு குறிப்புகள்.,


வழுக்கை தலையில் முடிவளர:சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே

Jul 27, 2012

தொண்டைக்கட்டு, எரிச்சல்



நம் முன்னோர்கள் சளி, ஜுரம், தலைவலி போன்றவை தம்மை அணுகாமல் ஆரோக்கியமாக உடலையும், மனதையும் காக்கும் வழி முறைகளை அறிந்திருந்தனர். உடலுழைப்பின் சிறப்பை செவ்வனே அறிந்திருந்த அவர்கள் நவீன உலகில் நாம் சந்திக்கும் அனேக பிரச்சினைகளையும் , இன்னல்களையும் அறிந்திருக்கவில்லை. சமையலறையில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பொருட்களுடன், கடைகளில் எளிதாகக் கிடைக்கும் ஆயுர்வேத மூலிகைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டு மருத்துவரிடம் செல்வதை கூடுமானவரையில் தவிர்த்து வந்தனர். அவற்றில் அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் என்று நினைத்து சில குறிப்புகளை எழுதுகிறேன்.

கண்டந்திப்பிலி பொடிகண்டந்திப்பிலி எனப்படும் இக்குச்சிகள் ' தாசவரம்

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்


சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.
* வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
* ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

* சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.
* துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...