Aug 22, 2012

உடலுக்குத் தேவையான பத்து கட்டளைகள்


தினந்தோறும், நம்முடைய உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் குறைவின்றிப் பெறுவதற்கான பத்து கட்டளைகள்:


1. உணவு பிரமிடை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள விகித்தின்படி சாப்பிட்டால், உடம்புக்கும் நல்லது, தேவையன வைட்டமின்களும் முழுமையாக கிடைக்கும்.


2. பொரும்பாலான வைட்டமின்கள், சமைக்கும்போது (அதிக சூட்டில்) அழிந்துவிடுகின்றன. ஆகவே, பச்சைக் காய்கறிகள், அரைவேக்காட்டில் சமைத்த உணவு வகைகளைச் சாப்பிடுவதில் நன்மை அதிகம்.

தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்!


சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:


விலங்கு புரதம் வேண்டாம்:


புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன

அல்சரை போக்க பச்சை வாழைப்பழம்

 

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.


உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.


வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.



வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.


உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.


வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.

காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?

நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்:தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

காய்கறிகளும் அவற்றின் மருத்துவ குணங்களும்.



வெண்டைக்காய்
குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி’, `பி’ மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாட்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
மேலும், வெண்டைக்காய் கொண்டு செய்யப்பட்ட உணவு ஆண்களுக்கு விந்துவை கெட்டிப் படுத்தி போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து மாத்திரை இல்லாமலேயே விந்து ஒழுக்கம் சரியாகிவிடும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்றுவலியை ஏற்படுத்தி விடும். அதனால் அவர்கள் வெண்டைக்காயை அளவோடு எடுத்துக்கொள்வது அவசியம்.

'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!

Numerous Health Benefits of Lemon - Food Habits and Nutrition Guide in Tamil



சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம்தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

உடலை உரமாக்கும் பீர்க்கங்காய்


Ridge Gourd - Food Habits and Nutrition Guide in Tamil சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரிய வர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...

 
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

சர்க்கரைநோய்யும் உணவுகளும்....உணவே மருந்து


சர்க்கரைநோய்யும் உணவுகளும்....


சர்க்கரை நோய் இன்று இந்தியாவில் அதிகம் பேருக்கு உள்ள பிரச்சனை. நாம் தினமும் பார்க்கும் 100 பேரில் ஒருவருக்காவது சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு இன்று சர்க்கரை நோய் பரவக் காரணம் நமது உணவுப்பழக்கவழக்கம்தான். இதுவே இப்பொழுது 70 வயதைக்கடந்தவர்களில் அதிகம் பேருக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் அவர்களின் உணவுப்பழக்கம் தான் காரணம். நாமும் நமது உணவுப் பழக்கத்தை கொஞ்சம் மாற்றினால் சர்க்கரை நோயில் இருந்து தப்பிக்கலாம் இதற்காக நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் அறிந்த தகவல்களை தொகுத்து அளித்து இருக்கிறேன்.

சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு

3டி படங்களுக்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்



3டி படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பமொன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.இதுவரை 3டி படங்கள் ப்ளூரே தொழில்நுட்பத்தில் வந்தன. அதாவது திரையில் ஒரு காட்சி இரண்டு வடிவங்களில் இருக்கும். அது ஒரு கண்ணுக்கு ஒரு படம் என்ற வகையில் இருக்கும்.
ஆனால் ஒரே காட்சியை 10க்கும் மேற்பட்ட வடிவங்களில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு ஆட்டோ ஸ்டீரியோகோபிக் டிஸ்ப்ளேக்கள் தேவைப்படும்.
ஏனெனில் இந்த திரைகள் 3டி படங்களை பல கோணங்களில் காண்பிக்க வேண்டும். மேலும் அவற்றை எங்கிருந்து பார்த்தாலும் முழுமையான 3டி அனுபவம் கிடைக்க வேண்டும்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...