சிறுநீரகமும் அதன் தொழில்பாடும்
சிறுநீரகம் இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத் தண்டின் இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக (இரண்டு) விலா எலும்புகளின் கீழ்ப்புறத்தில் அவரை விதை வடிவுள்ள இரு உறுப்புகள் ஆகும்.
ஏறக்குறைய நான்கு அங்குல நீளமும், இரண்டு அங்குல அகலமும், ஒரு அங்குலப் பருமனும் கொண்டதாக இருக்கும். இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக் குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலை போலக் காணப்படும். இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம். மனித உடலின் ஆதார சுருதி சிறுநீரகம்
சிறுநீரகம் என்றால் பிறப்புறுப்பு என்று பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். அது தவறு. நாம் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில் சிறுநீரகமும் ஒன்று. மிகச்சிறிய உறுப்பாயிருப்பினும் சிறுநீரகங்களின் பணி வியக்கத்தக்கது.
சிறுநீரகம் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் முக்கியமான பணியை மேற்கொள்வதால் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் ஆகியவை அதிகரித்தால் சிறுநீரகம் பாதிப்படைந்ததாக அறிய முடியும். இவற்றில் யூரியாவின் அளவு 100 மிலி, ரத்தத்தில் 20 முதல் 40 மி.கி. வரை இருக்கலாம். இந்த இரண்டு சிறுநீரகங்களும் நமது உடலின் கழிவுப் பொருள்களை வெளியேற்றும் அங்கமாக மட்டுமே செயல்படுவதில்லை.
இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம்.
சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை

















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா