ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில்
பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா
எதுவும் எழுதப்பட மாட்டாது.
இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும்.
இதற்கான காரணம்
என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க
என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்.
ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா
ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த
டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து
வெற்றிகரமாக முடிந்தது சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் தசோனை (படங்கள் இணைப்பு )
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பல், கடந்த ஆண்டு, சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய சீன தென்கடல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இச்சோதனை ஓட்டத்தில் போர் அமைபுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் இந்த செயல் சீன கடல் எல்லையை சுற்றியுள்ள நாடுகளுக்கு, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
எனினும், “எந்த நாட்டையும் மிரட்டுவதற்கான முயற்சி அல்ல. இது, சீனாவின் சாதாரண கடற்படை சோதனை நடவடிக்கையே’ என, சீன கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா