ஹார்ட் டிஸ்க் பிரிக்க போறீங்களா...முன்பெல்லாம், கம்ப்யூட்டரை முதலில் செட் செய்திடுகையிலேயே, ஹார்ட்
டிஸ்க்கினைப் பல பிரிவுகளாகப் (Drives) பிரித்து அமைப்பார்கள்.
பின்னர், அவற்றை மீண்டும் கூடுதல்
பிரிவுகளாகவோ, அல்லது ஏதேனும் ஒரு
பிரிவினை, இரண்டு அல்லது மூன்றாகவோ பிரிப்பது என்பது இயலாத செயலாக
இருந்தது.
ஆனால், காலப் போக்கில், ஏற்கனவே பிரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கூட,
அதன் பிரிவுகளில், உட் பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் பல இலவச டூல்
புரோகிராம்கள் இணையத்தில் கிடைத்து வருகின்றன.
இவற்றைப் பொதுவாக பார்ட்டிஷன் டூல் புரோகிராம் என அழைக்கின்றனர். இவற்றில்
மேஜிக் பார்ட்டிஷன் புரோகிராம் என்பது பலராலும் பயன்படுத்தப்படும் டூல்
ஆகும்.
இணையத்தில் இந்த டூல் சார்ந்த புரோகிராம்கள் குறித்துத் தேடுகையில்,
எளிய,ஆனால் அதிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்று தென்பட்டது. அதன் பெயர் மினி
டூல் பார்ட்டிஷன் விஸார்ட் (MiniTool Partition Wizard).
இதனை இங்கு கிளிக் செய்து இதில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம்
செய்து பயன்படுத்தலாம். இவற்றின் பயன்பாடுகள் குறித்து இங்கே காணலாம்.
இந்த புரோகிராம் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய சில சிறப்பான பயனுறை
செயல்பாடுகள் ஒரு பார்டிஷனை இரண்டாக, எளிதாகப் பிரிக்கலாம்.
வெற்றிகரமாக முடிந்தது சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் தசோனை (படங்கள் இணைப்பு )
சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பல் அதன் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது. உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி போர் கப்பல், கடந்த ஆண்டு, சீன கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய சீன தென்கடல் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இச்சோதனை ஓட்டத்தில் போர் அமைபுகள் உட்பட 100க்கும் மேற்பட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சீனாவின் இந்த செயல் சீன கடல் எல்லையை சுற்றியுள்ள நாடுகளுக்கு, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரேலிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
எனினும், “எந்த நாட்டையும் மிரட்டுவதற்கான முயற்சி அல்ல. இது, சீனாவின் சாதாரண கடற்படை சோதனை நடவடிக்கையே’ என, சீன கடற்படை அதிகாரி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா