Feb 22, 2014

ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை




முருங்கைக் காய் உடலுக்கு சிறந்த, ஆரோக்கியத்தைத் தரும் முருங்கை!!!ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இதன் கீரை மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட முருங்கையை பிடிக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். இது பல மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை ஒரு மூலிகை மரம் என்றும் சொல்லலாம். இந்த முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது. இது உடலின் பல விதமான நோய்களைக் கட்டுப்படுத்தி குணப்படுத்துகிறது.
முருங்கையின் நன்மைகள் :
1. முருங்கை இலையை பொரியல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல், கண்நோய், பித்த மயக்கம் போன்றவை வராது. மேலும் இந்த பொரியலை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். அப்படி பொரியல் செய்யும் போது அதில் புளி, எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை சேர்க்கக் கூடாது.
2. பெண்கள் முருங்கை இலையை சாறு பிழிந்து இரு வேளை குடித்து வந்தால், அடிவயிற்றில் ஏற்படும் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
3. குழந்தைகளுக்கு முருங்கை இலைச் சாற்றை பிழிந்து 10 மில்லி தினமும் இரு வேளை கொடுத்தால், உடலானது ஊட்டம் பெறும்.
4. முருங்கை பிஞ்சை சமைத்து சாப்பிட்டால் எலும்புருக்கி, சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது.
5. மேலும் முருங்கை இலையை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ குணமடையும்.
6. குடற்புண், டைபாய்டு, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், முருங்கைப்பட்டைத் தூள், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து, வெந்நீரைக் காய்ச்சி, அந்த பொடியைப் போட்டு கலக்கி, மூன்று வேளையும் சாப்பிட்டால், அவை சரியாகும்.
ஆகவே முருங்கையை சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருங்க!!!

Feb 20, 2014

பாவங்களை விளக்கும் தர்ப்பன பூமி

சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கூத்தனூர். அது ஸரஸ்வதி ஆலயத்திற்கு புகழ் பெற்ற தலம். மாணவ மாணவிகள் பரிட்சை நேரங்களில் அங்கு சென்று பேனா, பென்சில் போன்ற வற்றை வைத்து வணங்கி தாம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் அந்த ஆலயத்துடன் சம்மந்தப்பட்டுள்ள திலகை பதி என
அழைக்கப்படும் தர்பண பூமி அதாவது ஸ்ரீ முக்தீஸ்வரர் - சொர்ண வல்லி ஆலயம் பற்றிய பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
இராமபிரான் இராவணனை வென்று தன் நாட்டிற்குத் திரும்பியதும்," தர்பண பூமிக்குச் சென்று அங்கு பித்ரு காரியங்களை செய்து முடிந்ததும் கூத்தனூர் ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கிய பின்னர் தான் அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின". ஆகவே முக்தீஸ்வரர்- சொர்ண வல்லி ஆலயம் செல்பவர்கள் கூத்தனூர் ஆலயத்திற்கும் சென்று வணங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும் என கருதப்பட்டது. அதன் கதையை இனிபடியுங்கள்:

ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய அமைப்பு:

கூத்தனூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலயம். அதன் பக்கத்தில் அரி-சிவா என்ற ஆறு உள்ளது. அந்த ஆலயத்தின் தெற்கு முக நுழை வாயிலில் நர முக வினாயகர் என்ற பெயரில் அதாவது மனித முகத்துடன் கூடிய வினாயகர் எழுந்தருளி உள்ளார். உலகில் எந்த ஆலயத்திலும் மனித உருவுடன் வினாயகர் காட்சி அளிக்கும் நிலையில் சிலை கிடையாது என்பது அ தன் விஷேசம். ஆலயத்தில் கிழக்கு நோக்கி நாகம் பிடித்திருந்த குடையின் கீழ் அமர்ந்தபடி முக்தீஸ்வரர் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்புறச் சன்னதியில் பித்ரு லிங்கங்களும், இராமபிரான் மற்றும் நந்தி சோதன் என்ற மன்னனின் சிலைகளும் உள்ளன. மற்றொருபுறத்தில் மந்தார மரமும்;, அதன் அருகில்; சிவலிங்கம், தஷ்ணா மூர்த்தி போன்ற சிலைகளும் உள்ளன.

ஆலய வினாயகர் - பார்வதி தேவியின் கதை:

வினாயகர் பற்றிய கதை என்ன எனில் ஒரு முறை பர்வதி அந்த இ டத்திற்கு வந்து குளித்துக் கொண்டு இருந்த பொழுது ஆண்கள் எவரும் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணி நுழைவாயிலில் தனக்குக் காவல் இருக்க வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார் மஞ்சளினால் செய்யப்பட்ட ஒரு உருண்டையை பிடித்து; வைத்து விட்டு குளிக்கச் சென்ற பொழுது அந்த மஞ்சள் உருண்டை அவளுடைய பிள்ளையான வினாயகராக உருவெடுத்து காவலில் நின்றது. அதன் பிறகு பல காலம் பொறுத்துத்தான் அங்கு வந்த சிவனாரை உள்ளே விடாமல் தடுத்த பிள்ளையாருடைய தலை போன கதையும், யானை முகம் பெற்ற கதையும் நிகழ்ந்தனவாம்.ஆகவே பார்வதி அந்த தலத்தில் குளிக்க வந்த பொழுது காவலுக்கு நின்ற அங்குள்ள வினாயகர் ஆலயத்தில் உள்ள வினாயகர் மனிதத்

புதிய இணைய தள இணைப்புப் பெயர்கள்



இணைய தள முகவரிகளில், துணைப் பெயரினை நம் விருப்பப்படி அமைக்க முடியாது. ஏனென்றால், அவை இணையதளப் பெயர்களின் வகைகளைக் குறிக்கும்.

தொழில் நுட்ப ரீதியாக, அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தான், அவற்றை அமைப்பதும், அனைவரும் பயன்படுத்துவதும் இயலும். com, net, biz, edu போன்றவற்றை வரைமுறைப்படுத்தும் அமைப்பாக "ஐகான்" (ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)), செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்த அமைப்பு பல புதிய வகைப் பெயர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

முதலில் இணையதளப் பெயர்களின் துணைப் பெயராக. Com என்பதுதான் பலரும் பயன்படுத்தும் பெயராக இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு வாக்கில், உருவாக்கப்பட்ட இணைய தளங்களின் எண்ணிக்கை திடீரென பன்னாட்டளவில் அதிகமானதால், புதிய வகைப் பெயர்களை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதனை "dot com" boom என அனைவரும் அழைத்தனர். பின்னர், படிப்படியாக புதிய வகைப் பெயர்கள் தரப்பட்டன. அவற்றை இணைய நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கின.

பேஸ்புக் சந்தித்த பத்து திருப்புமுனைகள்



அண்மையில், பிப்ரவரி 4ல், சமூக இணைய தளமான பேஸ்புக் தன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடியது. 

ஹார்வேர்ட் பல்கலையில், சிறிய அளவில் தொடங்கி, இன்று நூறு கோடிக்கும் மேலாக வாடிக்கை யாளர்களைக் கொண்ட அசுர சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக் சரித்திரம், நிறுவனங்களைத் தொடங்கி நடத்த விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. 

பேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை இங்கு சுருக்கமாகக் காண்போம்.


1. ஓர் எளிய தொடக்கம்: 

2004 ஆம் ஆண்டில், ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் இரண்டாவது முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, 19 வயது ஹார்வேர்ட் மாணவரால், பேஸ்புக் தளத்திற்கான விதை ஊன்றப்பட்டது. 

Feb 19, 2014

24ஆம் தேதி பூமியை தாக்கும் ராட்சத விண்கல்


 24ஆம் தேதி பூமியை தாக்கும் ராட்சத விண்கல்
லண்ட9 (டி.என்.எஸ்) பூமியை தாக்க ராட்சத விண்கல் ஒன்று பாய்ந்து வந்துக்கொண்டிருப்பதாகவும், அது கால்பந்து மைதானத்தைவிட 3 மடங்கு பெரியதாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ன்,பிப்.1
'ரொபோடிக் டெலஸ்கோப்' மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது. (டி.என்.எஸ்)

Feb 18, 2014

96 வகை தத்துவங்கள்


தத்துவங்கள் 96

{ஆன்ம தத்துவங்கள் -24 உடலின் வாசல்கள் -9 தாதுக்கள் -7 மண்டலங்கள் -3 குணங்கள் -3 மலங்கள் -3 வியாதிகள் -3 விகாரங்கள் -8 ஆதாரங்கள் -6 வாயுக்கள் -10 நாடிகள் -10 அவத்தைகள் -5 ஐவுடம்புகள் -5}
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்  தத்துவா தீதமேல் நிலையில்  சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்  சிவநிலை தெரிந்திடச் சென்றேம்  ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்  
ஒருங்குறக் கரைந்துபோயினம்என்  றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்  அருட்பெருஞ் சோதிஎன் அரசே. – -(அருட்பெருஞ்சோதி அட்டகம் )
ஆன்ம தத்துவங்கள் 24
ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளைஉடையது. அவை, பூதங்கள் – 5 (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) ஞானேந்திரியங்கள் -5 (மெய், வாய், கண், மூக்கு, செவி) கர்மேந்திரியங்கள் -5 (வாய், கை, கால், மலவாய், கருவாய்) தன்மாத்திரைகள் -5 (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) அந்தக்கரணங்கள் -4 ((மனம், அறிவு, நினைவு, முனைப்பு)

வாட்ஸ்ஆப் (WhatsApp)’ மாதிரியான வேறு சில இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷன்!

மாகி வருகிறது ‘வாட்ஸ் ஆப்’ (Whats App) என்கிற ‘இன்ஸ்டன் ட் மெசேஜிங்’ என்கிற ஆப்ஸ்… உலகம் முழுக்க ஒவ்வொரு மா தமும் சுமார் 30 கோடி பேர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்களாம். கொஞ்சம்கூட மிரட்டாத, எளிமையான தோற் றத்தில்
இருக்கும் இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ, வீடியோ, புகைப்படங்கள், கான்டக்ட் ஸ் என அனைத்தையும் அ சால்ட்டாக அனு ப்பலாம். இந்த ‘வாட்ஸ்ஆப்’ மாதிரி யான வேறு சில ‘இன்ஸ் டன்ட் மெசேஜிங்’ ஆப்ஸ்க ளை இப்போது பார்ப்போம்.
1. வைபர் (Viber)
என்னதான் வாட்ஸ்ஆப் பரவ லாகப் பயன்படுத்தப்பட்டாலு ம்,அதில்வாய்ஸ்கால்கள் இ ல்லை. வைபரின் முக்கிய அ ம்சமே வாய்ஸ்கால்கள்தான் . மிகக்குறைவான செலவி ல் இன்டர்நெட்டை பயன்படுத் திபேசிக்கொள்வதற்கு இந்த’வைபர்’ உதவிசெய்கிறது. தவிர, மெசேஜ்,ஆடியோ, வீடி யோ, புகைப்படங்கள், கான்டக்ட்ஸ் போன்றவ ற்றையும் தாராளமாக அனுப்பலாம்.
ஹைலைட்:
இந்த ஆப்ஸை உலக அளவில் 50 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள்.
2. பிபிஎம் (BlackBerry Messenger)
இருபிபிஎம் ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவு டன் ஒரு ‘பிபிஎம்பின்’ வழங்கப்படு ம். இதுபோல மற்றவர்களின் ‘பிபி எம்பின்’ இருந்தால் தான் அவர்களு க்கு மெபிபிஎம்சேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக  ஆப்ஸ்-ன் சிறப்பம்சம் அதன் பாதுகாப்புதான். பிபிஎம் ஆப்ஸை மொபைலில் இன்ஸ்டால் செய்தவு டன் ஒரு ‘பிபிஎம்பின்’ வழங்கப்படு ம். இதுபோல மற்றவர்களின் ‘பிபி எம்பின்’ இருந்தால் தான் அவர்களு க்கு மெசேஜ்களை அனுப்ப முடியும். இது பாதுகாப்பான அம்சமாக இருந் தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்துபவர்களை கவரு ம்படி இல்லை.
ஹைலைட்:
இந்த ஆப்ஸை உலக அளவில் 1-5 கோடி பேர் இன்ஸ்டால் செய்து பயன் படுத்துகிறார்கள்.
3. லைன் சாட் (Line Chat)
‘லைன் சாட்’தான் தற்போதைய மார்க்கெட்டின் ஹாட் செல் லிங் ஆப்ஸ். பார்க்கக் கவர்ச்சியா கவும், பயன்படுத்த எளிதாகவும் அமைந்திருக்கும் இந்த ஆப்ஸின் மூலம் மெசேஜ், போட்டோ, வீடி யோ, வாய்ஸ் மெசேஜ் என அனை த்தையும் அனுப்பலாம். மேலும், வீடியோ சாட்கள் மற்றும் வீடியோ கான்ஃ பரன்ஸிங் இந்த ஆப்ஸில் மிகச் சுலபம்.
ஹைலைட்:
இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50 கோ டி பேர் இன்ஸ்டால் செய்து பயன்படுத்து கிறார்கள்.
4. குரூப் மீ (Group Me)
குரூப் சாட்களுக்கான பிரத் யேகமான ஆப்ஸ் ‘குரூப் மீ’. தோற்றத்திலும், பயன் பாட்டிலும் எளிமையாகவு ம் விரைவாகவும் இயங்கக் கூடிய ‘குரூப் மீ’ ஆப்ஸ் மூ லம் வெவ்வேறு இடத்தில் இருக்கும் நண்பர்கள், வி யாபார ரீதியாக வீடியோ கான்ஃபரன்ஸ் என அனை வரும் ஒன்றாக குரூப் சாட் செய்ய முடியும். இதன் மூலமும் மெசேஜ், லொக்கேஷன் (பயனாளர் இருப்பிடம் குறித்த விவரங்கள், ரூட் மேப் போன்றவை), ஆடியோ, வீடியோ மற்றும் கான்டக் ட்களை அனுப்பலாம்.
ஹைலைட்:
இந்த ஆப்ஸை உலக அளவில் 10-50  லட்சம் பேர் இன்ஸ் டால் செய்து பயன்படுத்துகி றார்கள்.
மேலே சொன்ன ஆப்ஸ்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைப்பதுவும், இதில் மேற் கொள்ளும் செயல்பாடுகளு க்குக்கட்டணம் எதுவும் கி டையாது என்பதுவும் கூடுத ல் சிறப்பு.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!ந் தாலும், இதன் வடிவமைப்பு பயன்படுத்து

[RAW] Amazing Footage of Lightning Striking the Burj Khalifa


புலிக்கு உணவாக கூண்டிற்குள் குதித்த வாலிபர்..... கடைசியில் காப்பாற்றப்பட்டாரா?

புலிக்கு உணவாக கூண்டிற்குள் குதித்த வாலிபர்..... கடைசியில் காப்பாற்றப்பட்டாரா?....

Tuesday, February 18, 2014
- See more at: http://www.arivomaayiram.com/2014/02/world-news-01_295.html#sthash.1KetIeeZ.dpuf


Tuesday, February 18, 2014

ஜப்பானில் இரண்டாவது பனிப்புயல்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு-ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்பு


ஜப்பானில் இரண்டாவது பனிப்புயல்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு-ஆயிரக்கணக்கான மக்கள் தவிப்புடோக்கியோ, பிப். 18-

ஜப்பானில் இந்த மாதம் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்து, ரயில், விமான சேவைகள் போன்றவை பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மீண்டும், காதலர் தினமான கடந்த 14ஆம் தேதி கடுமையான பனிப்புயலின் தாக்கத்தில் ஆயிரக்கணக்கான ஜப்பான் மக்கள் சிக்கினர். இந்தப் புயலினால் ஜப்பானின் மத்தியப் பகுதியான யமனாஷி முழுவதும் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் பனி நிறைந்து காணப்பட்டது. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உறைபனியின் அளவு குறைவாக

Feb 16, 2014

ஆரோக்கியத்தை தரும் வல்லாரைக் கீரை தோசை

Photo: ஆரோக்கியத்தை தரும் வல்லாரைக் கீரை தோசை
 
வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும். அத்தகைய வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை தோசை செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

வல்லரைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கேழ்வரகு - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவைகளை நன்கு கழுவி, மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, அந்த மாவில் வல்லாரைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், ஆரோக்கியமான வல்லாரைக் கீரை தோசை ரெடி!!!


வல்லாரைக் கீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் இதனை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும். அத்தகைய வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள
், அதனை தோசை செய்து சாப்பிடலாம்.ஆரோக்கியத்தை தரும் வல்லாரைக் கீரை தோசை

தேவையான பொருட்கள்:

வல்லரைக் கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
புழுங்கல் அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
கேழ்வரகு - 1/4 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் கேழ்வரகு ஆகியவற்றை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அவைகளை நன்கு கழுவி, மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, அந்த மாவில் வல்லாரைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அந்த மாவை தோசைகளாக ஊற்றி எடுத்தால், ஆரோக்கியமான வல்லாரைக் கீரை தோசை ரெடி!!!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...