Mar 3, 2014

தொலைபேசி பிறந்த கதை



இன்றைய காலகட்டத்தில் தொலைபேசி இல்லாத நாட்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது….
ஒவ்வொருவரின் கைகளையும் அலங்கரித்துக் கொண்டிருக்கிறது, இந்த உன்னத சாதனத்தை உருவாக்கியவர் தான் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்…
கடந்த 1847ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்னும் இடத்தில் பிறந்தார்.
சிறுவயதில் இருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி வந்தவர், படிப்பை முடித்துவிட்டு தன் தந்தையோடு காது கேளாதவர்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தார்.
அவருடைய 23வது வயதில் காசநோய் ஏற்படவே, பெல்லின் உடல்நிலை கருதி அவரது குடும்பம் 1870ம் ஆண்டுகளில் கனடா நாட்டிற்கு குடிபெயர்ந்தது.
இதற்கு அடுத்த வருடம் பாஸ்டன் பல்கலைகழத்தில் பேராசிரியராக

முதுமையில் இளமை! திங்கட்கிழமை, மார்ச் 2014,



மனிதனாக பிறந்த யார்தான் எப்போதும் இளமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களை இளமையானவராக உணரவும், வெளிக்காட்டி கொள்ளவும் பல வழிகளை ஆர்வமுடன் தேடுகின்றனர்.
அந்த வழிகள் சத்தான உணவுகளை உண்பதன் மூலம் கிடைக்கின்றன.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புகளும் இதில் காணப்படுகின்றன,
கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன, முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.
தோல் வறட்சியை நீக்கி முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
சால்மன்
சருமத்தை மிருதுவாக வைக்க பெண்கள் வாரத்திற்கு ஒரு முறை 12 அவுன்ஸ் சால்மன் மீனை உண்ண வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் பரிந்துரைக்கிறது.
சால்மனில் வைட்டமின் பி12, வைட்டமின் டி ஆகியவை செறிந்துள்ள ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. உடலின் கட்டிகளை குறைக்கிறது. இது நாள்பட்ட நோயின் தீவிரத்தை குறைக்கிறது. மேலும் 50 வயதினை கடந்த பெண்களின் பொதுவான பிரச்சனையான இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.
பசுமையான இலை கீரைகள்
பசலைக்கீரை, கொலார்டூ கீரைகள், ரோமன் லெட்யூஸ் மற்றும் ஸ்விஸ் கேரட் ஆகியவை வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள பசுமையான காய்கறிகள் ஆகும்.
க்ரீன் கேரட்டில் உள்ள வைட்டமின் பி இதயத்திற்கும், நினைவாற்றலுக்கும் நல்லது. வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மேலும் எண்ணற்ற பச்சை காய்கறிகளில் கண்டறியப்பட்டுள்ள லுடேயின் பார்வை திறனை பாதுகாக்கிறது. பச்சை காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் முகத்தின் கோடுகளையும், சுருக்கங்களையும் தடுக்கிறது.
பொதுவாக பச்சை காய்கறிகளில் காணப்படும் லைகோஃபைன், லூடென் மற்றும் பீட்டா கரோட்டீன் சருமத்தின் முதுமைக்கு காரணமான புறஊதாக் கதிர்களை தடுக்கிறது.
கீரைகளில் காணப்படும் சத்துக்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் முடக்கு வாதம் ஆகிய நோய்க்கு எதிராக போரிடுகிறது. மேலும் சில குறிப்பிட்ட வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.
பூண்டு
பூண்டில் சுவையும், நன்மையும் சம அளவில் கலந்துள்ளன. கல்லீரலின் இயக்கு திறனை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும் பூண்டு துணை புரிகிறது.செல் சீரழிவினை தடுக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோய்களை தடுக்கிறது.
பட்டியலிலுள்ள மற்ற உணவு வகைகளை போலவே பூண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் செறிந்து காணப்படுகிறது. இது அசாதாரண செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. விழிப்புணர்விற்காக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது.

Mar 2, 2014

ஆரோக்கியமான வாழ்விற்கு சோளம்!


நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்திய கலாச்சர தாக்குதலால் சத்து மிகுந்த உணவு பொருட்கள் பயன்பாடு குறைந்தது.
ஆனால் இப்போது உணவு பொருட்கள் மூலம் பெருகி வரும் நோய்களால் பண்டைய உணவு பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சமீபகாலமாக கம்பு, ராகி போன்ற தமிழர்களின் பண்டைய சிறு தானியங்களை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.
சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது.
சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது.
சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள பொரி லட்டு, சேமியா, கொழுக்கட்டை, சமோசா உள்ளிட்ட பல உணவு

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படும் அதிவேக Broadband இணைய சேவை



Virgin Media வலையமைப்பானது 152Mb வேகம் கொண்ட Broadband இணைய சேவையை பிரித்தானியாவில் அறிமுகம் செய்கின்றது.
இதன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒரு நிமிட நேரத்தில் தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007ம் ஆண்டில் காணப்பட்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை விடவும் தற்போது 55 சதவீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவித்த அந்நிறுவனம் ஆரம்பத்தில் 30Mb வேக இணைய இணைப்பைக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் தமது இணைப்பு வேகத்தினை 50Mb, 60Mb, 100Mb, 120Mb மற்றும் 152Mb வேகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

கடலின் உள்அழகை காட்சிப்படுத்தும் கூகுள்


கூகுள் நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுள் Street View எனும் சேவையும் பிரபல்யம் வாய்ந்தமை அறிந்ததே.
இச்சேவையினை கூகுள் நிறுவனம் Underwater Street View எனும் பெயருடன் நீருக்கு அடியில் உள்ள அரிய தகவல்களை பயனர்களுக்காக வெளிக்கொணரும் சேவைக்கு விஸ்தரித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய தினம் நீருக்கு அடியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயனர்களின் பார்வைக்கு விடவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏனைய தொழிநுட்ப செய்தி Netflix வழங்கவுள்ள ஆகாயவழி டெலிவரி சேவை (வீடியோ இணைப்பு)



தொலைக்காட்சி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களை ஒன்லைனினல் கண்டுகளிக்கும் வசதியை வழங்கும் Netflix நிறுவனம் DVD - களை டெலிவரி செய்யும் சேவையையும் செய்து வருகின்றது.
இந்நிறுவனம் தற்போது Drone Delivery Service எனும் ஆகாயவழி மூலமான டெலிவரி சேவையை வழங்கவுள்ளது.
இதற்கு முன்னர் அமேசான் நிறுவனமே இந்த சேவையினை அறிமுகம் செய்திருந்தது.
அதன் பின்னர் குறுகிய காலத்தில் தானும் Drone Delivery சேவையினை அறிமுகம் செய்வதாக Netflix நிறுவனம் தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Drone 2 Home என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் விரைவான வழங்கலை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜிமெயில் அறிமுகப்படு த்தும் புதிய வசதி


தனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும்.
இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது.
ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Snsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்!


லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.
சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது.
லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.
லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் திராட்சை

சத்துக்களை அதிகம் அள்ளித்தந்து ஆரோக்கியமான வாழ்விற்கு துணைநிற்கிறது திராட்சை.
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.
குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் திராட்சை
த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.
மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

அதிசயங்கள் நிறைந்த மனித உடல்



  
 அதி

மனிதன்
சயங்கள் நிறைந்த மனித உடல்
 தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.
இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள்
1. நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.
2. நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீட்டராக இருக்கும்.
3. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர்

தேனின் தித்திக்கும் இனிப்பு


தேனின் அதிகப்படியான இனிப்பிற்கு காரணம் அதில் உள்ள ஃப்ரக்டோஸ் எனப்படும் சர்க்கரை தான்.
சர்க்கரையில் பல வகைகள் உள்ளன, கரும்பில் உள்ளது சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரை.
இதை இன்வெர்டேஸ் என்கிற நொதியால் சிதைத்தால், குளுகோஸ், ஃப்ரக்டோஸ் என்ற இரு சிறு சர்க்கரை பொருட்கள் கிடைக்கும்.
இவற்றில் ஃப்ரக்டோஸ் எல்லாவித பழங்களிலும் இருக்கிறது.
பழங்களின் சுவைக்கு இவை தான் காரணம், இதுதவிர பூவிலுள்ள மதுவிலும் இந்த சர்க்கரை தான் நிரம்பியுள்ளது.
தேன் எப்படி கிடைக்கிறது?
தேனீக்கள் மலர்களின் மகரந்தங்களிலிருந்து , பூந்தேனை குடித்து வந்து, தேன் அடைகளில் தேக்கி வைத்து தித்திக்கும் தேனாய் நமக்கு தருகின்றன.
தேனீக்கள் உடலில் சுரக்கும் ஒருவகை சுரப்பி நீர், பூந்தேனை நாமருந்தும் தேனாக மாற்றுவதில் பெறும் பங்கு வகிக்கின்றது.
தேனின் தரம்
தேனில் இனிப்பு சத்து அதிகம். ஃப்ரக்டோஸ், குளுகோஸ் அதிகமாகவும், தாது பொருட்கள் குறைவாகவும் உள்ளன.
அந்ததந்த பகுதிகளில் பூக்கும் மலர்களின் தன்மையை பொருத்தே, தேனின் தன்மையும் அமையும்.
தேனில் உள்ள ஈரபதத்தின் அடிப்படையில் தேனின் தரம் நிர்ணயம் செய்யபடுகின்றது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...