வெப்பம் நல்லது:-உடம்பில் உயிர் நிலைத்திருக்க இன்றியமையாதவையாக இருப்பவை நீரும், நெருப்பும். இவை இரண்டும் இல்லையென்றால், உடம்பில் உயிர் தங்காது. உடம்பு பிணமாகிப் போகும். உடம்பில் நெருப்பு என்று குறிப்பிடுவது, சூடாகும். சூடு இல்லாமல் போனால், ரத்தம் உறைந்துவிடும். பனிமலைகளில் ஆடையோ தகுந்த பாதுகாப்போ இல்லாமற் போனால், ரத்தம் உறைந்து இறக்க நேரிடும். ஆகவே, உடம்பிலுள்ள சூடு, உடலெங்கும் பரவியிருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உடம்பில் சூடு இல்லாத இடமோ, அல்லது உறுப்புகளோ இல்லை. உடம்பிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் சூடு பரவி நிறைந்துள்ளது. அதனால், அவை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.




உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப்
பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும்
கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன்,
ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில்
கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.
ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில
முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை
தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி
ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல்
தடுக்கிறது.
சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா