மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.
பூமி காரகனான செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட மேட ராசி அன்பர்களே..!
இவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி முதல் அஷ்டம சனி தொடங்குகின்றது. ஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 3ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே செய்யும் பணியிலும் தொழிலும் கவனம் தேவை. உடல் நலம் பாதிப்படையும். ஆனால் ஆயுள் கண்டம் கிடையாது. இவ்வருடத்தில் அஷ்டம சனி ஆரம்பிப்பதாலும் இந்த ராசிக்கு குரு பார்வை வருடம் ணிழுவதும் சனீஸ்வரன் மேல் இருப்பதால் அதிகமாக கெட்ட பலன் இருந்த போதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொழிலில் விருத்தியும் முன்னேற்றணிம் உண்டாகும். மாணவர்கள் மிகவம் கஷ்டப்பட்டு படித்து நல்ல பெறுபேற்றை பெறுவார்கள். மிகவும் வேதனையை தந்த நோய் பாதிப்பு குறையும். ஆனால் ஆடி மாதத்தில் உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. இவ்வருடத்தில் கொடுக்கல்- வாங்களை தவிர்க்கவும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா