Apr 13, 2014

உலகளவில் அமைதியான நாடுகளின் பட்டியல்! 8வது இடத்தில் கனடா



உலகளவில் அமைதியான நாடுகளின் பட்டியல்! 8வது இடத்தில் கனடா
சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014,
உலகளவில் மக்கள் மிக அமைதியாக வாழ தகுதியான நாடுகள் எவை என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.இந்த ஆய்வினை Global Peace Index என்ற நிறுவனத்திற்காக IEP(Institute for Economics and Peace என்ற அமைப்பு எடுத்துள்ளது.
குறித்த நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் வன்முறை மற்றும் தீவிரவாத பயமின்றி மக்கள் வாழ்வதாகவும், அந்த நாட்டினால் பிற நாடுகளுக்கு எவ்வித பயமுறுத்தலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதில் கனடா 8வது இடத்தை பிடித்துள்ளது, பொதுமக்கள் சிறிதும் அமைதியின்றி வாழும் நாடாக ஆப்கானிஸ்தான் தெரிவு செய்யப்பட்டு கடைசி

வெள்ள அபாயத்தில் கனடா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்



வெள்ள அபாயத்தில் கனடா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
 ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014,
கனடாவின் ஒன்ராறியோவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனடாவின் ஒன்ராறியோ கிழக்கு நகர ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என்பதால் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதை தடுக்க தொண்டர்கள் முக்கிய பகுதிகளில் மணல் மூட்டைகளை அணைகளாக கட்ட உதவ வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் நகராட்சியில் ஏற்கனவே அவசரகால நிலைமை பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் அதே நேரம் மேலதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டால், ஆறுகள் அணைகளை உடைத்துக் கொண்டு பாய்ந்துவிடும் என்ற காரணத்தால் வெள்ளத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக வானிலை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு ஆறு ஒன்று உச்சத்தை தொட்டுவிட்டதாகவும் வேறு இரண்டு மெதுவாக உயரந்து வருவதாகவும் குயின்ரே பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஏரி ஒன்று 24-மணித்தியாலங்களிற்குள் 12-செ.மீ வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பெருக்கை விடவும் மிக மோசமாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.
எனவே மக்கள் கவனமுடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முகப்பு

சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை



சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு: சுனாமி எச்சரிக்கை
 ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014,
சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாலமன் தீவுகளில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலமன் தீவுகள், பப்புவா நியூகினியா மற்றும் நியூ கெலடோனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சாலமன் தீவுகளி்ல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16 பேர் உயிரிழந்தமை குறிப்புடத்தக்கது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை

பிறக்கும் புதுவருட பலன்களின் அதிஸ்ரம்


Race-300x130கிரக சஞ்சாரங்களின் படி ஜய வருடத்தின் அனைத்து ராசிகளுக்கான புதுவருட ராசி பலன்கள்.
மேடம்
அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9 பாதங்கள்.
பூமி காரகனான செவ்வாயை ஆட்சி வீடாக கொண்ட மேட ராசி அன்பர்களே..!
இவ்வருடம் ஐப்பசி மாதம் 16ஆம் திகதி முதல் அஷ்டம சனி தொடங்குகின்றது. ஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான், கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். ஆனி மாதம் 5ஆம் திகதி ணிதல் குருபகவான் 3ஆம் இடத்தில் இருந்து 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே செய்யும் பணியிலும் தொழிலும் கவனம் தேவை. உடல் நலம் பாதிப்படையும். ஆனால் ஆயுள் கண்டம் கிடையாது. இவ்வருடத்தில் அஷ்டம சனி ஆரம்பிப்பதாலும் இந்த ராசிக்கு குரு பார்வை வருடம் ணிழுவதும் சனீஸ்வரன் மேல் இருப்பதால் அதிகமாக கெட்ட பலன் இருந்த போதிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. தொழிலில் விருத்தியும் முன்னேற்றணிம் உண்டாகும். மாணவர்கள் மிகவம் கஷ்டப்பட்டு படித்து நல்ல பெறுபேற்றை பெறுவார்கள். மிகவும் வேதனையை தந்த நோய் பாதிப்பு குறையும். ஆனால் ஆடி மாதத்தில் உடல்நிலையில் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புண்டு. இவ்வருடத்தில் கொடுக்கல்- வாங்களை தவிர்க்கவும்.

உலகிலேயே மிகப்பெரிய தங்கப்பாளம், வெனிசூலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

 நாள் : Apr 13 | 11:59 am
 உலகிலேயே மிகப்பெரிய தங்கப்பாளம், வெனிசூலாவில் கண்டுபிடிக்கப்பட்டது. கோல்ப் பந்து அளவுக்கு இருந்த அந்த கல்லின் எடை 217.78 கிராம் ஆகும். அதன் மதிப்பு சுமார் ரூ.9 கோடி. அமெரிக்க நிபுணர்கள், அதை பரிசோதித்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதற்காக அவர்கள் நியூட்ரான் ஸ்கேனரை பயன்படுத்தினர். எக்ஸ்ரே, எலெக்ட்ரான் போன்றவற்றை போல இல்லாமல், நியூட்ரான்கள், பெரும்பாலான கனிமங்களில் மிக ஆழமாக ஊடுருவி பார்க்கவல்லவை. அப்படி ஊடுருவி பார்த்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளனர்.

Apr 12, 2014


Tamil New year rasi palan - 2014 | கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாழ்வில் சுபயோகம்! - 70/100

Tamil New year rasi palan - 2014 | கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) வாழ்வில் சுபயோகம்! - 70/100

Apr 11, 2014

உங்கள் கணினி பற்றிய முழு தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான மென்பொருள்




உங்களுடைய கணினி பற்றிய பூரணமான தகவல்களை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வமாக இருப்பீர்கள். ஆனால் மென்பொருள்களின் துணையின்றி கணினி பற்றிய தகவல்கள் அனைத்தையும் பார்ப்பது என்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. ஒவ்வொரு விடயங்களை பார்ப்பதற்கும் ஒவ்வொரு பகுதிக்கு செல்லவேண்டும். அவ்வாறு அல்லாமல் கணினி பற்றிய அத்தனை விடயங்களையும் ஒரே கிளிக்கில் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

இதற்கு உதவி செய்கிறது SIV எனப்படும் சிறிய மென்பொருள். இது உங்கள் கணினி பற்றிய ஒட்டுமொத்த தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது. Hardware, Network, Windows, CPU, PCI, USB போன்ற பல தகவல்களை ஒரே இடத்தில் திரட்டி தருகிறது. 4.25 Mb அளவுடைய Zip File இல் இந்த மென்பொருள் வருகிறது. கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. Zip File ஐ Extract பண்ணி மென்பொருளை Open பண்ணலாம்.

இம் மென்பொருளை Open பண்ணியதும் முகப்பு பக்கத்தில் கணினி பற்றிய அனைத்து விபரமும் காண்பிக்கப்படும். மென்பொருளின் கீழ் பக்கத்தில் பல Tab கள் காணப்படும். முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் அதில் விரிவாக காணலாம்

அடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது.

Photo: அடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது. 

அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது Microsoft நிறுவனம்.

இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்திக்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட மென்பொருள் இரண்டு கணனிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தரவுகளை Data Cable மூலமாகவோ LAN வலையமைப்பினூடாகவோ தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்களும் Microsoft இன் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

http://sarfan.blogspot.com/2014/04/windows-xp.htmlஅடுத்த வாரம் அதாவது April 8 ஆம் திகதிமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Windows XP இயங்குதள பாவனை முடிவுக்கு வர இருக்கின்றது.

அதன் பின்னர் புதிய இயங்குதளங்களுக்கு தமது கணினிகளை புதுப்பித்துக்கொள்ளும்படி மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு புதிய இயங்குதளங்களுக்கு நகர இருப்பவர்களுக்காக PCmover Express எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளது Microsoft நிறுவனம்.

இதன் மூலம் Windows XP இல் இருக்கக் கூடிய அனைத்து தரவுகளையும் அதாவது பயனர் கணக்குகள், கணனியில் நீங்கள் மேற்கொண்டுள்ள அமைப்புக்கள், தேவையான கோப்புறைகள் போன்றவற்றினை Windows 7, Windows 8/8.1 போன்ற புதிய இயங்குதளங்களுக்கு மிக இலகுவாக நகர்திக்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட மென்பொருள் இரண்டு கணனிகளிலும் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தரவுகளை Data Cable மூலமாகவோ LAN வலையமைப்பினூடாகவோ தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட மென்பொருளை நீங்களும் Microsoft இன் உத்தியோக பூர்வ இணைய தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Seagate அறிமுகப்படுத்தும் உலகின் வேகம் கூடிய 6TB Hard Disk


Seagate அறிமுகப்படுத்தும் உலகின் வேகம் கூடிய 6TB Hard Disk

Seagate நிறுவனமானது உலகின் வேகம் கூடிய நான்காம்
தலைமுறை வன்றட்டினை (Hard Disk) அறிமுகம் செய்துள்ளது.

3.5 அங்குல அளவுடைய இவ்வன்றட்டானது 6TB சேமிப்பு கொள்ளளவினை உடையதாகவும் 7200 rpm உடையதாகவும் காணப்படுவதுடன், இது ஏனைய 6TB வன்றட்டுக்களுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் வேகம் கூடியதாகவும் காணப்படுகின்றது.

இவற்றில் 12 Gb/s அல்லது 6 Gb/s வேகம் கொண்ட பதிப்புக்கள் கிடைக்கப்பெறுவதுடன் தரவுப்பரிமாற்ற வேகமானது செக்கனுக்கு 226 Mb ஆகவும் அமைந்துள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...