May 3, 2014

கண்டுபிடிப்புகள் :

Photo: கண்டுபிடிப்புகள் :-

தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர். இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில் நுட்ப வளரச்சி அடைதுள்ளது.-

தொலைபேசி (Telephone) என்பது தொலைவில் இருப்பவருடன் பேசப் பயன்படும் ஒரு மின்கருவி. இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் (Alexander Graham Bell) கண்டுபிடித்தார் என்று பொதுவாகக் கூறினும், 1849-1875 ஆண்டுகளுக்கிடையே பல ஆய்வாளர்கள் முன்னோடியாக உழைத்து இது பற்றி பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியுள்ளனர். இக்கருவி எவ்வாறு இயங்குகிறது எனில் ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றி, பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு ஒருவர் பேசுவது மற்றொருவர் உலகில் எங்கிருந்தாலும் கேட்கும் வண்ணம் பயன் படும் கருவிக்குத் தொலைபேசி என்று பெயர். இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வண்ணம் தொழில் நுட்ப வளரச்சி அடைதுள்ளது.

மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை

Photo: மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை                                                                                                                                                                                                    
 1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's))

 ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)

ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)

ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)

ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)

ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)

ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)

ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)

ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)

எந்திரனில் ரஜினி ரோபோ 1 ஸெட்டா பைட் மெமரியை கொண்டுள்ளதாக காட்டப்பட்டது..அதையும் தாண்டி யோட்டோபைட் உள்ளது. ஓகே எந்திரன் பாகம்-2 ல் இதை செல்லுவார்களோ?!மெமரி அளவுகள் - பிட் முதல் யோட்டா வரை
1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's))

ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)

ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)

ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)

ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)

ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)

ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)

ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)

ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)

எந்திரனில் ரஜினி ரோபோ 1 ஸெட்டா பைட் மெமரியை கொண்டுள்ளதாக காட்டப்பட்டது..அதையும் தாண்டி யோட்டோபைட் உள்ளது. ஓகே எந்திரன் பாகம்-2 ல் இதை செல்லுவார்களோ?!

டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

Photo: டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

 தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

1. டேப்ளட் பிசியின் அளவு:
டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள் உள்ளன. ஐ–பேட் அதன் திரை 10 அங்குலம் (சரியாகச் சொன்னால் 9.56) என வரையறை செய்தது. அதன் எடை 750 கிராம் முதல் 900 கிராம் வரை என்ற ரீதியில் இருந்தது. சிலர் 12 அங்குல திரையை எதிர்பார்த்தனர். ஆனால், பொதுவாக ஐ–பேட் சற்று கூடுதல் தடிமனுடன் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

தற்போது மார்க்கட்டில் வந்துள்ள டேப்ளட் பிசிக்கள், ஐ–பாட் பாணியைப் பின்பற்றாமல், மக்கள் விருப்பம் எனத் தாங்கள் கணித்தபடி, அவற்றைத் தந்துள்ளனர். சாம்சங் காலக்ஸி டேப் முதல் வெரிஸான் வரை 7 அங்குல திரை கொண்டுள்ளன. எடை 600 கிராமிற்கும் குறைவாகவே உள்ளது. எனவே நாள் முழுவதும் தூக்கிக் கொண்டு செயல்படுபவருக்கு, இது உகந்ததாகவே உள்ளது. அஸூஸ் நிறுவனம் 8 அல்லது 12 அங்குல அகலத்திரையுடன் டேப்ளட் பிசி தர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஒருவருக்கு சிறியதாக இருப்பது, இன்னொருவருக்கு பெரியதாக இருக்கலாம். அளவு என்பது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்ததே.

2. ஸ்டோரேஜ் அளவு:
ஐ–பாட் 16, 32 மற்றும் 64 ஜிபி உள் நினைவகத் துடன் வந்தது. இதில் கூடுதல் நினைவகத்தை ஏற்படுத்த முடியாது. கூடுதலாக நினைவகம் வேண்டும் எனில், புதியதாகத்தான் வாங்க வேண்டும். விரிவு படுத்த வேண்டும் எனில், இவற்றில் வெளியிலிருந்து இணைத்துப் பயன்படுத்தக் கூடிய நினைவகத்தைத் தான் நாட வேண்டும். அப்படி யானால், அதற்கான எஸ்.டி. அல்லது மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் கொண்ட டேப்ளட் பிசி வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் 7 இயக்கம் கொண்ட டேப்ளட் பிசிக்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி 16 மற்றும் 32 ஜிபி நினைவகத்துடனும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்டுடனும் கிடைக்கிறது. பிமோடோ (bModo) என்னும் விண்டோஸ் டேப்ளட் பிசி, சற்று எடை கூடுதலாக இருந்தாலும், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் கொண்டு இருப்பதால், எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ்களை இணைக்க வழி தருகிறது.
விண்டோஸ் 7 அடிப்படையில் இயங்கும் சி.டி.எல். (CTL) டேப்ளட் 250 ஜிபி ஹார்ட் ட்ரைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

3.பேட்டரி திறன்:
டேப்ளட் பிசிக்களில் அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் அதில் தரப்பட்டிருக்கும் பேட்டரி களாகும். ஐ–பேட் இந்த வகையில் 10 முதல் 12 மணி நேரம் வரை தொடர்ந்து மின் சக்தி தருவதாக அமைக்கப்பட்டு, பெயர் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸியில், 7 மணி நேரம் ஹை டெபனிஷன் வீடியோ பார்க்கலாம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. சாதாரண பணிகள் எனில், 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், விண்டோஸ் 7 இயக்கம் கொண்டுள்ள டேப்ளட் பிசிக்கள், இந்த விஷயத்தில் ஏமாற்றம் தருகின்றன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் உள்ள டேப்ளட் பிசிக்கள் நிறைவைத் தருகின்றன.

4. 3ஜி அல்லது வை–பி மட்டுமா?
சில டேப்ளட் பிசிக்கள் 3ஜி அல்லது வை–பி நெட்வொர்க் இணைப்பு என ஏதேனும் ஒன்றையே தருகின்றன. இந்தியாவில் அறிமுகமாகும்போது, இதில் ஒரு தெளிவு ஏற்பட்டு, இரண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

5. சிஸ்டம்:
ஆண்ட்ராய்ட் போல ஓப்பன் சிஸ்டம் அல்லது விண்டோஸ் 7 போல குளோஸ்டு சிஸ்டம் எனத் தற்போது சாய்ஸ் உள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் எனில், அது கொண்டுள்ள டேப்ளட் பிசியில் சில வரையறைகள் உள்ளன. விண்டோஸ் சிஸ்டம் கொண்டுள்ள டேப்ளட் பிசியில், இந்த வரையறைகள் இல்லை. எனவே, தேவைகளின் அடிப்படையில்தான் இவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும்.

6.உள்ளீடு வழிகள்:
ஐ–பேட் சாதனம் கொண்டுள்ள, ஆன்ஸ்கிரீன் கீ போர்ட், பெரிய அளவில் டாகுமெண்ட்களை உருவாக்க ஒரு தடையாகவே கருதப்படுகிறது. எனவே வயர்டு கீ போர்ட் அல்லது இணைப்பின்றி செயல்படும் புளுடூத் கீ போர்டு பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க டேப்ளட் பிசிக்களில், யு.எஸ்.பி. போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால், அதன் இணைப்பில் கீ போர்டுகளைக் கொண்டு, விரைவாகச் செயல்படலாம்.

7. விலை:
மிக முக்கியமான ஒரு விஷயம் விலையே. இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் விலையின் அடிப்படையிலேயே எந்த சாதனத்தினையும் வாங்கிப் பயன்படுத்த முன்வருவார்கள் என்பது ஏற்கனவே மொபைல் போன் மற்றும் சில சாதனங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, இந்தியாவில் டேப்ளட் பிசிக்கள் விற்பனைக்கு நேரடியாக அறிமுகம் ஆகும்போது இந்த அம்சமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.

8. சிரிங்க, கேமரா முன்னால இருக்கு:
ஐ–பேட் சாதனம் குறித்துக் கருத்து தெரிவிக்கையில், அதில் கேமரா இல்லாதது பலமாகப் பேசப்பட்டது. பொதுவான போட்டோ எடுக்கும் வகையிலான கேமரா அந்த சாதனத்திற்குள் இல்லை. எனவே போட்டோ எடுக்க வேண்டும் அல்லது வீடியோ கான்பரன்சிங் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் எனில், ஆப்பிள் ஐ–பேட் உகந்தது அல்ல என்ற கருத்தினை அனைவரும் மேற்கொண்டுள்ளனர். மற்ற பெரும் பாலான நிறுவனங்களின் படைப்புகள் கேமராவினைக் கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

9. கூடுதல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்:
ஸ்மார்ட் போன் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில், அதில் எத்தனை அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து இயக்கலாம் எனவே அனைவரும் எதிர்பார்க் கின்றனர். ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர், ஐ–பேட் மற்றும் ஐ–போனுக்கென ஆயிரக் கணக்கில் அப்ளிகேஷன் புரோகிராம்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஐ–பேட் சாதனத்திற்கான புரோகிராம்கள் என எடுத்துக் கொண்டால், அவை சற்றுக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் டேப்ளட் பிசிக்களுக்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் பல வர இருப்பதாக தகவல்கள் இதனாலேயே வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டே, எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை வாங்குவது என்றும் முடிவு செய்திடலாம்.

10.ஒத்திசைந்த செயல்பாடு:
ஒரு டேப்ளட் பிசி தனியே மட்டும் இயங்காது. உங்களுக்கு 3ஜி டேப்ளட் பிசி வேண்டும் என்றால், அது உங்களுக்கு அந்த சேவையைத் தரும் நிறுவனத்தின் செயல்பாட்டுடன் இணைந்து செல்ல வேண்டும். கேலக்ஸி டேப் போன்ற டேப்ளட் பிசிக்கள், ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை இணைப்புகளுடன் இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவையாக உள்ளன. எனவே டேப்ளட் பிசியைத் தேர்ந்தெடுக்கையில் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில், நமக்கு எந்த மாதிரி டேப்ளட் பிசி வேண்டும் என ஒரு பரவலான முடிவினை எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தியச் சந்தையில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள், டேப்ளட் பிசிக்களைக் கொண்டு வருகையில், முடிவினை எடுக்க இது உதவியாக இருக்கும்.டேப்ளட் பிசி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை!

தற்போது மக்கள் கம்ப்யூட்டர் வாங்குவதை விட்டுவிட்டு, டேப்ளட் பிசிக்களை நாட இருக்கின்றனர். பல வசதிகள், தனி நபர் விருப்பங்கள், இயக்க, எடுத்துச் செல்ல எளிது எனப் பல புதிய சிறப்புகளில் டேப்ளட் பிசி, தற்போதைய டிஜிட்டல் உலகில் இடம் பிடித்துள்ளது. ஒரு டேப்ளட் பிசியை, என்ன என்ன அம்சங்களைப் பார்த்து வாங்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

1. டேப்ளட் பிசியின் அளவு:
டேப்ளட் பிசி வாங்கும் ஒவ்வொருவரும், அது தடிமன் குறைந்ததாகவும், குறைந்த எடை கொண்டதாகவும், எடுத்துச் சென்று பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதே நேரத்தில், அதன் திரை என்ன அகலத்தில் இருக்க வேண்டும் என்பதில், பல வகையான அபிப்ராயங்கள்

Apr 27, 2014


உடல் பருமனாக உள்ளீர்களா. அப்ப இதை அவசியம் படிங்க..

உடல் பருமனை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். அது இன்று, நோயின் அடையாளமாக மாறி போயிருக்கிறது.

‘கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் உடல் பருமனாக இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக பெருகிவருகிறது. இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு அறிகுறி’ என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சித்த மருத்துவர் என். சந்திரகுமார் இங்கே விரிவாக விளக்குகிறார்.

‘இந்திய மக்கள் தொகையில், 15 சதவிகிதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதில், ஆண்கள் 20 சதவிகிதத்திற்கு மேலும், பெண்கள் 25 சதவிகிதத்திற்கு மேலும் உடல் பருமனால் பாதிப்புக்குள்ளாகி தவிக்கின்றனர்’ என்று புள்ளிவிவரங்களை அடுக்கியவர், பாதிப்புகளை பற்றி பேசினார்.

கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

Photo: கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. இது வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டும் என எண்ண வேண்டாம். இப்பொழுது நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விசயமாக இருக்கிறது. 

அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? 

கொலஸ்டரோல் உங்கள் இரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும். வெளிப்படையாக உங்களுக்கு உடலுழைவோ, கழுத்துழைவோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறெந்தப் பிரச்சனையோ இருக்கப்; போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்ல,
பக்கவாதம், 

மாரடைப்பு

சிறுநீரக நோய்கள்,

கண்பார்வை பாதிப்பு,

போன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். 

என்ன பரிசோதனை

வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாத பிரச்சனை என்பதால் இரத்தப் பரிசோதனை மூலமே ஒருவருக்கு இந்நோய் இருப்பதைக் கண்டறியலாம். 

Lipid Profile என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த இரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்துவதில் தவறில்லை. 

யாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்? 

25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.

ஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஏனையவர்களுக்கும் வயது வித்தியாசமின்றிச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.

பின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம் 

உயர் இரத்த அழுத்தம் உள்ளோர்

நீரிழிவு நோயாளிகள்

சிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்

இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர். அதாவது மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்களும் அதுவரக் கூடிய சாத்தியமுள்ளவர்களும்.

தமது இரத்த உறவுகளில் மேற் கூறிய இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர்

கொழுத்த உடல் வாகுடையோர் ( BMI >25) 

புகைபிடிப்போர்

உடலுழைப்பு அற்ற தொழில் செய்பவர்கள்

மாதவிடாய் முற்றாக நின்ற பெண்கள்

அத்தகையோர் வயது வேறுபாடின்றி தமது இரத்த கொலஸ்டரோல் அளவை அறிந்திருப்பது அவசியமாகும்.

இரத்த கொலஸ்டரோலில் Total Cholesrterol, LDL , HDL, triglygeride எனப் பல வகைகள் உண்டு. ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL (Low density lipoprotein) கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும். 

ஏன் அதிகரிக்கின்றன?

இவை அதிகரிப்பிற்கு

உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன.

ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.

ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.

பரம்பரை அம்சங்கள் 15% சதவிகிதம்,

அதிகரித்த எடை 12% சதவிகிதம்,

ஹோர்மோன்களும் நொதியங்களும் 8% சதவிகிதம்,

உயர் இரத்த அழுத்தம் 8% சதவிகிதம்,

அதிக மது பாவனை 2% சதவிகிதம்,

மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 % சதவிகிதம்,

நீரிழிவு 7% சதவிகிதம்,

உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6% சதவிகிதம்,

புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6% சதவிகிதம்,

ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5% சதவிகிதம்

எனச் சொல்லப்படுகிறது.

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25% சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே.

எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15% சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

செய்ய வேண்டியவை

1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள உணவுகளைக் குறையுங்கள்

2. உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறையுங்கள்

3. நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளை (தவிடு நீக்காத தானிய வகைகள், காய்கறிகள், பழவகைகள்) கூடுதலாக உட்கொள்ளுங்கள்

4. புகைப்பராயின் அதை நிறுத்துங்கள்

5. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்

6. எடையை உங்களது உயரத்திற்கு ஏற்றவாறு வைத்திருங்கள்.

7. மதுபானத்தைத் தவிருங்கள்.

8. மருத்துவ ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளுங்கள்

9. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத எடை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிக அவசியம்.கொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-

வெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. இது வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டும் என எண்ண வேண்டாம். இப்பொழுது நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விசயமாக இருக்கிறது.

அது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்?

கொலஸ்டரோல் உங்கள் இரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும். வெளிப்படையாக உங்களுக்கு உடலுழைவோ, கழுத்துழைவோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறெந்தப் பிரச்சனையோ இருக்கப்; போவதில்லை.

மூக்கு குத்துவது..!



மூக்கு குத்துவது..!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில

Photo: பாலில் கால்சியம் எவ்வளவு?

வலுவான எலும்புக்கு கால்சியம் மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் கால்சியம் தேவைப்படுகிறது. சிறுவர்களுக்கு தினசரி 1200 மி.கி. தேவை. 200 மி.லி. பாலில் 300 மி.கி கால்சியம் உள்ளது. காலை, மாலை, இரவு என 3 வேளை பால் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும். 

பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மோர், தயிர், பாலாடை, பால்கோவா, வெண்ணெய் என்று பாலில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் நெத்தில், வஞ்சரம், மத்தி, கெளுத்தி போன்ற மீன் வகைகைளச் சாப்பிடலாம். 


கீரைகளில் முள்ளங்கிக்கீரை, பசலை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. அதேபோல தர்பூசணிப் பழத்தில் கால்சியம் நிறைவாக உள்ளது.பாலில் கால்சியம் எவ்வளவு?

வலுவான எலும்புக்கு கால்சியம் மிகவும் அவசியம். வயதுக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளில் கால்சியம் தேவைப்படுகிறது. சிறுவர்களுக்கு தினசரி 1200 மி.கி. தேவை. 200 மி.லி. பாலில் 300 மி.கி கால்சியம் உள்ளது. காலை, மாலை, இரவு என 3 வேளை பால் சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைத்துவிடும்.

பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் மோர், தயிர், பாலாடை, பால்கோவா, வெண்ணெய் என்று பாலில் தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிடலாம். அசைவப் பிரியர்கள் நெத்தில், வஞ்சரம், மத்தி, கெளுத்தி போன்ற மீன் வகைகைளச் சாப்பிடலாம்.


கீரைகளில் முள்ளங்கிக்கீரை, பசலை, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. அதேபோல தர்பூசணிப் பழத்தில் கால்சியம் நிறைவாக உள்ளது.

கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்

Photo: கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்

பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. 

* இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 

* வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ, கூடவோ செய்கிறது. 

* தோலை விட உள்ளங்கை மற்றும் வாயின் உட்புறம் ஏராளமான நுண்கிருமிகள் இருப்பதால், இவற்றின் மூலம் கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

* காட்டு ஏலக்காய், கிருமிகளை அழிக்க வல்லது. அமோமம் சபுலேட்டம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜி பெரேசியே குடும்பத்தைச் சார்ந்த செடிகளின் உலர்ந்த பழங்களே காட்டு ஏலக்காய். பெரிய ஏலக்காய் அல்லது பேரேலம் என்று அழைக்கப்படுகின்றது.

* சால்கோன் என்ற கார்டோமோனின், அல்பினிட்டின், சபுலின் மற்றும் சினியோல் என்ற நறுமணமுள்ள மருந்துசத்து ஆகியன காணப்படுகின்றன. இவை, வயிற்றில் வளரும் தேவையற்ற நுண்கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, செரிமான சக்தியை தூண்டி, பலவிதமான வயிற்று உபாதைகள் மற்றும் வயிற்று வலியை நீக்குகின்றன.

காட்டு ஏலக்காய் – 20 கிராம், இலவங்கப்பட்டை – 20 கிராம், சிறுநாகப்பூ – 20 கிராம், சுக்கு – 20 கிராம், மிளகு – 20 கிராம், திப்பிலி – 20 கிராம், வாய்விடங்கம் – 20 கிராம், மல்லிவிதை – 20 கிராம், ஆகியவற்றை சுத்தம் செய்து, இளவறுப்பாக வறுத்து, இடித்து, பொடித்து, சலித்து, 120 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டியளவு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்பு ஏழு நாட்கள் சாப்பிட்டு வர, நுண்கிருமிகளால் ஏற்பட்ட பல்வேறு வகையான வயிற்று உபாதைகள் நீங்கும்.
கிருமிகளை அழிக்கும் காட்டு ஏலக்காய்

பார்சல் உணவுகளை, உணவகத்தில் வாங்கும் பொழுது பணியாளர்கள் பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவை நிரப்பி கட்டிக் கொடுப்பதால், பல்வேறு வகையான நுண்கிருமிகள் அவர்களது வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன.

* இட்லி மாவை புளிக்கச் செய்தல், உணவை செரிக்கச் செய்தல் போன்றவற்றிற்கு, 150 வகையான கிருமிகள் பயன்பட்டாலும், எஞ்சிய பல கிருமிகள், பல்வேறு வகையான நோய்களை பரப்புவதற்கு உதவுகின்றன. ஆண்களை விட பெண்களின் கையில் நுண்கிருமிகள் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

* வியர்வை, தோலின் எண்ணெய் சுரப்பு, ஹார்மோன்கள், வெள்ளை அணுக்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், நாம் பயன்படுத்தும் சோப்பு, கை கழுவுதல் ஆகியவற்றை பொறுத்து, கிருமிகளின் எண்ணிக்கை, குறையவோ,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...