அணுத் தமிழ்
- நன்னூல்
மொழிகளின் தொன்மைக்குச் சான்றே அவற்றின் பழம்பெரும் இலக்கியங்ளே. எனவே, அவற்றிற்கு "பழையன கழிதல்" என்பது பொருந்தா. ஆனால், மொழிகளின் உய்விற்கு புதியன புகுதல் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
பண்டைய மொழிகளின் தற்கால நிலை:
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்கள் மட்டுமே அறியப்பெற்றிருந்த காலங்களில் உலகில் கோலோச்சிய பண்டைய மொழிகள் ஆறு என்று மொழியியல் ஆய்வாளர்கள் கூறுகிறனர்.
அவை தமிழ், சமஸ்கிருதம், சீனம், கிரேக்கம், இலத்தீன் மற்றும் எபிரேயம் (ஹீப்ரு) ஆகியன.
இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
இவற்றில், இலத்தீன் மொழி சமஸ்கிருதமும் வழக்கொழிந்து போய் பிரார்த்தனைக்கு மட்டுமே பயன்படுகிறன. கிரேக்கமும், ஹீப்ருவும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு இப்போது மீண்டிருக்கிறன. சீனமோ தன்னைப் படையெடுத்து வந்தவர்களிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொண்டது. பல்வேறு படையெடுப்புகளையும் தாங்கி, பிற மொழிக் கலவைகளாலும் பாதிப்புறாமல் இன்றும் தழைத்தோங்கும் மொழி தமிழ் ஒன்று தான்.
முற்காலங்களில் தமிழ்:
சங்கக்காலத்தில் தமிழ் மொழி மூன்று வகைகளின் மூலம் செழித்தோங்கியது. அவை இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய பெயர்களில் வளர்ந்தது. உலகிலேயே மிகவும் தொன்மையான இலக்கன நூலான "தொல்காப்பியம்" தமிழ் மொழி அன்றே ஒரு முழு வடிவம் பெற்றிந்தமைக்குச் சான்றாக விளங்குகிறது.
அதன் பின், பாமரரும் படித்து புரிந்து கொள்வதற்கு என "உரைநடைத் தமிழ்" வந்தது. வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்கள் உருவான பின், தமிழ் மொழி அவற்றின் மூலமாகவும் மக்களை அடைய முனைந்தது.
அணுத்தமிழ்:
ஆங்கிலேயர்கள் உலகை ஆண்ட போது, உலகெங்கும் ஆங்கில மொழி புகுந்தது. அதன் விளைவாக, பெரும்பாலான ஊடகங்களிலும் ஆங்கிலமே பிரதான மொழியாக மாறியது.
இன்றைய காலத்தில், மொழியின் வளர்ச்சிக்கு அது எல்லா ஊடகங்களிலும் பரப்ப வல்லதாக இருத்தல் வேண்டும். இதை உணர்ந்த சில தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் தான் இன்று உலகெங்கும் அணுத்தமிழ் உதித்து வளர்ந்து வருகிறது.
கணிணித் தமிழ்:
அணுத் தமிழ் வளர்ச்சியின் முதல் படியே கணிணியில் தான் துவங்கியது. விண்டோஸ் இயங்கு தளம் உருவாகும் முன்னரே, கணிணித் தமிழ் பயன்பாட்டில் இருந்தது.
மக்கள் மத்தியில் விண்டோஸ் உருவான பிறகே கணிணி பிரபலமாகத் துவங்கியது. விண்டோஸ் அறிமுகப்படுத்த போது, ஆங்கிலத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மக்களின் அறியாமை காரணமாக இடையில், கணிணித் தமிழ் பெரிதாய் வளர்ச்சியின்றி முடங்கியிருந்தது. எனவே, தமிழ் மொழி பெரும்பாலும் தட்டச்சு செய்வதற்கு மட்டுமே கணிணியில் உலா வந்தது.
இப்போது மீண்டும் தமிழ் ஆர்வலர்களின் ஆர்வத்தால், கணிணித் தமிழ் மறு எழுச்சி பெற்றுள்ளது. பலரின் அயராத முயற்சியால், இன்று கணிணி தமிழ் பேசுகிறது.
தமிழ் பேசும் இயங்குதளங்கள்:
லினக்ஸ் என்று சொல்லப்படும் கட்டற்ற திறமூல இயங்குதளங்கள் பலவும் இன்று தமிழ் பேசும் திறன் பெற்று விட்டன. விண்டோஸ் பதிப்பு தமிழில் கிடைக்கிறது என்றாலும், அதனைஅறிந்தவர்கள் மிகவும் குறைவு.
உபுண்டு இயங்குதளத்தில் தமிழ் பதிப்பு உள்ளது. மேலும், விரும்பினால், நிறுவல் மொழியையே தமிழாக வைக்க வகை செய்கிறது.
தமிழில் பயன்பாடுகள்:
பெரும்பாலான பயன்பாடுகள் தமிழில் உள்ளன. தமிழில் பயன்பாடு கிடைக்கும் போது ஆங்கிலத்தில் ஏன் பயன்படுத்த வேண்டும்?
உலாவிகளில் தமிழ்:
நெருப்பு நரி என்றழைக்கப்படும் பயர்பாக்ஸ் உலாவி தான் முதன்முதலில் தமிழை இணையத்தில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு, குரோம், எபிக், ஓபரா முதலிய உலாவிகள் தமிழில் பேசத் துவங்கின.
இணையத் தமிழ்:
பல காலமாக இணையத்தமிழ் இருந்தாலும், இணையத்தமிழ் வலைப்பூக்களின் அறிமுகத்திற்குப் பின் மிகவும் வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியது. இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள தயங்கிய பலரும் வலைப்பூ துவங்கி தங்கள் எண்ணங்களையும், திறமைகளையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். இப்படி எழுதத் துவங்கிய பலரும் பிறர் எழுதிய படைப்புகளையும் படித்து மகிழ இணையத்தமிழ் அசுர வளர்ச்சி அடைந்தது.
பதிவர்கள் பெருகியதால், பதிவர்கள் அனைவரும் தங்கள் பதிவுகளைத் தொகுக்க இன்ட்லி, தமிழ்10, யுடான்ஸ், வலைச்சரம் போன்ற பல திரட்டிகள் துவங்கப்பட்டன. திரட்டிகளின் வரவால் பதிவுகளின் தரம் மேலும் மேம்பட்டதோடு, பதிவுகள் மேலும் பலரைச் சென்றடைந்தது.
விக்கிபீடியா தனது தளத்தின் தமிழ் பதிப்பை வெளியிட்டதும் இணையத்தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். இன்று பல தமிழ் பதிவுகள் உலகெங்கும் வலம் வருகிறன.
அலைத்தமிழ்:











![மனிதன், பாம்பு, தேள், பூரான், நாய்க்கடி விசம் நீங்கத் தமிழ்ச்சித்தர் பெருமக்கள் அருளிய சித்தமருத்துவம்.
பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ மரணத்தை வாங்கித்தரும் பாம்பு, நாய் போன்ற நச்சு விசங்களை நீக்குவது பற்றி நாம் கதைப்போம். பொரும்பாலும் இந்த நச்சு விசங்கள் உயிருக்கே கேட்டைத் தந்து விடுவது உண்டு. பல எலி போன்ற விசங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும். எலிக்கடியினால் பின்னாளில் மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே எந்த விசமனாலும் அவற்றை முறைப்படி நீக்கிக்கொள்ள வேண்டும் .
நாய்க்கடி
நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும். (அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விசம் நீங்கும்.
சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும். உடலில் நடுக்கம் உண்டாகும். குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும். சிறிய நங்கை மூலிகைப் பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை, மாலை உண்டுவர விசம் முறியும் .
வண்டுகடி
ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம், பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விசம் நீங்கும்.
செய்யான் விசம்
தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விசம் நீங்கும். எட்டிக்கொட்டை எடுத்துப் பால் விட்டரைத்து அருந்த விசம் முறியும்.
பூரான்
இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும். பூரான்போல் தடிப்பு உண்டாகும். குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விசம் நீங்கும். சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம்.
விரியன் பாம்பு கடித்தால்
இதில் பல வகை உண்டு. கருவிரிய பாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும். கடுப்பு உண்டாகும். இதற்குப் பழைய வரகு அரிசி இருநூறு கிராம் கொண்டுவந்து, பிரய்மரப்பட்டை இருநூறு கிராம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விசம் நீங்கும் .
நல்ல பாம்பு கடித்தால்
நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்கக் கக்கல்(வாந்தி) கழிச்சல் உண்டாகி விசம் வெளியேறும். தும்பைச் சாறு 25 மில்லி எடுத்து, மிளகு பத்து கிராம் அரைத்துக் கொடுக்க விசம் நீங்கும். வெள்ளருகு மென்று தின்ன விசம் முறியும் .
தேள் கடித்தால்
தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மில்லி அருந்த விசம் முறியும். நிலாவரைத் தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விசம் முறியும் .
எலிக்கடிகள்
அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விசம் முறியும். அவுரி மூலிகை பத்துக்கிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விசம் முறியும்.
மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )
சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். சிரியா நங்கை அரைத்தேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும். பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விசம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துக்கொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம்.
சித்தமருத்துவம் காப்போம்!
நோய் வெல்வோம்!
via Ezhilini Rasa
<3, @[115109758557124:274:தமிழ் -கருத்துக்களம்-]](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/s403x403/179707_486551801412916_566583411_n.jpg)

















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா