Posted: 20 Jul 2013

விரைவில்
வெளியாக இருக்கும், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பிரவுசர், விண்டோஸ் 7
சிஸ்டத்திலும் இயங்கும் வகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியானபோது, முதலில் விண்டோஸ் 7
சிஸ்டத்திற்கான பிரவுசர் வெளியாகவில்லை. விண்டோஸ் 8ல் மட்டுமே இயங்கும் என
அறிவிக்கப்பட்டது.
பின்னர், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பினைக் கண்ட,
மைக்ரோசாப்ட், விண்டோஸ்7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் 10 ஐ வெளியிட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், விண்டோஸ் 8
சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ளாமலேயே, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11
பதிப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்கு மகிழ்ச்சியான தகவலாக
அமையும்.
விண்டோஸ் 8.1 பொதுமக்களுக்கு வெளியிடப்படும் போதுதான், இன்டர்நெட்
எக்ஸ்புளோரர் 11 உடன் வெளியாகும். இருப்பினும் இதன் சோதனைப் பதிப்பைத்
தற்போது, மைக்ரோசாப்ட் இணைய தளத்திலிருந்து பெற்று பயன்படுத்திக்
கொள்ளலாம்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா