சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கூத்தனூர். அது ஸரஸ்வதி ஆலயத்திற்கு புகழ் பெற்ற தலம். மாணவ மாணவிகள் பரிட்சை நேரங்களில் அங்கு சென்று பேனா, பென்சில் போன்ற வற்றை வைத்து வணங்கி தாம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் அந்த ஆலயத்துடன் சம்மந்தப்பட்டுள்ள திலகை பதி என
அழைக்கப்படும் தர்பண பூமி அதாவது ஸ்ரீ முக்தீஸ்வரர் - சொர்ண வல்லி ஆலயம் பற்றிய பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்காது.
இராமபிரான் இராவணனை வென்று தன் நாட்டிற்குத் திரும்பியதும்," தர்பண பூமிக்குச் சென்று அங்கு பித்ரு காரியங்களை செய்து முடிந்ததும் கூத்தனூர் ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கிய பின்னர் தான் அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின". ஆகவே முக்தீஸ்வரர்- சொர்ண வல்லி ஆலயம் செல்பவர்கள் கூத்தனூர் ஆலயத்திற்கும் சென்று வணங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும் என கருதப்பட்டது. அதன் கதையை இனிபடியுங்கள்:
ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய அமைப்பு:
கூத்தனூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலயம். அதன் பக்கத்தில் அரி-சிவா என்ற ஆறு உள்ளது. அந்த ஆலயத்தின் தெற்கு முக நுழை வாயிலில் நர முக வினாயகர் என்ற பெயரில் அதாவது மனித முகத்துடன் கூடிய வினாயகர் எழுந்தருளி உள்ளார். உலகில் எந்த ஆலயத்திலும் மனித உருவுடன் வினாயகர் காட்சி அளிக்கும் நிலையில் சிலை கிடையாது என்பது அ தன் விஷேசம். ஆலயத்தில் கிழக்கு நோக்கி நாகம் பிடித்திருந்த குடையின் கீழ் அமர்ந்தபடி முக்தீஸ்வரர் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்புறச் சன்னதியில் பித்ரு லிங்கங்களும், இராமபிரான் மற்றும் நந்தி சோதன் என்ற மன்னனின் சிலைகளும் உள்ளன. மற்றொருபுறத்தில் மந்தார மரமும்;, அதன் அருகில்; சிவலிங்கம், தஷ்ணா மூர்த்தி போன்ற சிலைகளும் உள்ளன.
ஆலய வினாயகர் - பார்வதி தேவியின் கதை:
வினாயகர் பற்றிய கதை என்ன எனில் ஒரு முறை பர்வதி அந்த இ டத்திற்கு வந்து குளித்துக் கொண்டு இருந்த பொழுது ஆண்கள் எவரும் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணி நுழைவாயிலில் தனக்குக் காவல் இருக்க மஞ்சளினால் செய்யப்பட்ட ஒரு உருண்டையை பிடித்து; வைத்து விட்டு குளிக்கச் சென்ற பொழுது அந்த மஞ்சள் உருண்டை அவளுடைய பிள்ளையான வினாயகராக உருவெடுத்து காவலில் நின்றது. அதன் பிறகு பல காலம் பொறுத்துத்தான் அங்கு வந்த சிவனாரை உள்ளே விடாமல் தடுத்த பிள்ளையாருடைய தலை போன கதையும், யானை முகம் பெற்ற கதையும் நிகழ்ந்தனவாம்.ஆகவே பார்வதி அந்த தலத்தில் குளிக்க வந்த பொழுது காவலுக்கு நின்ற அங்குள்ள வினாயகர் ஆலயத்தில் உள்ள வினாயகர் மனிதத்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா