Dec 28, 2013

ஐயப்பனின் வரலாறு

மகசி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.

Dec 24, 2013

அழித்த பைல்களை எப்ப...

அழித்த பைல்களை எப்ப&#29...


கம்ப்யூட்டர்பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை
மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும்

Dec 22, 2013

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேப்ளிட் PC

1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர்.

தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே அடியோடு புரட்டிப் போட்டன.

இப்போது முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு, 2012 ஆம் ஆண்டில், மைக் ரோசாப்ட், முற்றிலும் புதிய முயற்சியாக, ஹார்ட்வேர் பிரிவில், டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டரைத் தயாரித்து

வருகிறது மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்ளட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஜூன் மாதம், தான் வடிவமைத்து தயாரிக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசி மற்றும் விண்டோஸ் போன் 8 குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. 

இவை இரண்டும் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சர்பேஸ் டேப்ளட் அக்டோபர் 25 அன்றும், விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29 அன்றும் வெளியிடப்படும்.

சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசியில் 10 அங்குல திரை, டச் ஸ்கிரீன் டிஸ்பிளே சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ஏ.ஆர்.எம். ப்ராசசர் இயங்கும். 

மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், யு.எஸ்.பி.2 போர்ட், மைக்ரோ எச்.டி. வீடியோ, சிறப்பான வைபி இணைப்பிற்காக 2x2 MIMO ஆன்டென்னா ஆகியவை தரப்படும். 

விண்டோஸ் 8 போன் வெளியிடப்படுகையில், முழுமையான இதன் பயன்பாடு காட்டப்படும். 

நோக்கியாவின் லூமியா மற்றும் எச்.டி.சி. யின் இணையான போன்கள் வெளியிடப்பட இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் ஸ்மார்ட் போன் வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.


கூகுள் ட்ரைவ் டிப்ஸ்




கூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். 

இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.


1. இணைய இணைப்பு இல்லாமல்: 

கூகுள் ட்ரைவ் என்பதே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்குவதாகும். ஆனாலும், ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்து, செட்டிங்ஸ் மேற்கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலேயே, உங்கள் டாகுமெண்ட்களைப் பார்க்கலாம் மற்றும் திருத்தலாம். 

பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடலுக்கு பல்வேறு நன்மை பயக்கும் பச்சை பட்டாணி

நாம் அன்றாடம் உட்கொள்ளும் காய்கறிகள் பல பலன்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்த பலனை உள்ளடங்கியுள்ளது. 




ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, பழங்காலத்தில் இருந்தே விளையும் காய்கறிகளில் ஒன்றாகும். மாவுச்சத்து நிறைந்த பச்சை பட்டாணி நமது நாட்டில் விளையும்

Dec 16, 2013

வான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்

வான்மீகி, வியாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க அடிகள் இவர்கள் எப்படி ஞானம் பெற்றனர்

வான்மீகி தான் எல்லை கடந்த நிலை வரப்படும் பொழுதுதான் ஞானத்தைப் பெறுகின்றார்.

தனக்கு விபத்து என்ற நிலையில், தப்பிக்கும் எண்ணத்தில் வரும் பொழுதுதான் வியாசகர் ஞானம் பெறுகின்றார்.

அருணகிரிநாதர் எவ்வளவோ செல்வச் செருக்கோடு இருந்தாலும், கடைசியில் தன் உடலில் வேதனைகளாகும் பொழுது, அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வில்

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கு நீங்கள் கூடுமான வரை (படத்தில் காட்டியபடி) இதே மாதிரி வைத்துக் கொண்டு படுத்து கொஞ்ச நேரம் மூச்சை அடக்கி, எங்களுக்குள் இருக்ககூடிய சர்க்கரைச் சத்து சமமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து மூச்சை இழுங்கள்.

சர்க்கரைச் சத்தைக் குறைப்பதற்கு வழி - ஞானகுரு

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்றும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து குறைய வேண்டும் என்று எண்ணுங்கள். நாளுக்கு நாள் இது குறையத் தொடங்கும்.

நமது உடலில் சர்க்கரையை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் பெருகிவிட்டால்,

நொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)


Monday, December 16, 2013

Dec 15, 2013

சமாதானத்தின் தூதுவன்!

சமாதானத்தின் தூதுவன்!
''ஒரு மனிதன் தன் மொழி, இனம், பொருளாதாரப் பாகுபாடுகளைக்கூட மறைத்து வாழலாம். ஆனால் உடலின் நிறத்தை மறைத்து வாழ முடியாது. நாங்கள் பிறப்பால் அவ்வளவு இழிவுகளையும் அசிங்கங்களையும்  வேதனைகளோடு சுமந்து வாழ்ந்தவர்கள். எம் கறுப்பின மக்கள் இனி யாருக்கும் அடிமை இல்லை. அடிமைச் சங்கிலி உடைக்கப்படுகிறது. இனி அவர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக உலா வரலாம். பேசலாம், பாடலாம், சமமாகப் பயணிக்கலாம், சமமாக

கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்


 
0
மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். 
தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடியவர் நெல்சன் மண்டேலா. இனவெறியை எதிர்த்து 27 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த மண்டேலாவை தென்னாபிரிக்க தந்தை என்று போற்றுகின்றனர். அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்ற மண்டேலா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 6ஆம் திகதி உயிரிழந்தார். 
மண்டேலா மறைவையடுத்து பல நாடுகளில் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதோடு அந் நாடுகளின் தேசிய கொடிகளும் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தன.
மேலும் மண்டேலா மறைவையடுத்து 10 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என ஜனாதிபதி ஜாக்கோப் ஜூமா அறிவித்திருந்தார். இந்நிலையில் மண்டேலா நினைவு இறுதி பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு அந்நாட்டு அரசு கடந்த 10ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. அதிபர் ஜாக்கோப் ஜூமா தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­  இந்திய ஜனாதிபதி பிரணாப், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர் புஷ், கிளின்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். உலகிலேயே மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.
 
இதைத் தொடர்ந்தது இன்று மண்டேலாவின் சொந்த கிராமமான கிழக்கு கேப் டவுனில் இருக்கும் குனு கிராமத்தில் அவரது சொந்த வீட்டின் அருகே நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று இலட்சக்கணக்கான தென்னாபிரிக்க மக்கள் சாலையின் இரு புறமும் திரண்டு நின்று கண்ணீரோடு வழியனுப்பி வைக்க மண்டேலாவின் உடல் அரச வாகனத்தில் குனுவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
தங்களது நேசமிகு தலைவரின் இறுதி ஊர்வலத்தை பூக்கள் தூவியும், கண்ணீரால் நனைத்தும் வழியனுப்பிய காட்சி இந்த நூற்றாண்டில் இனவெறிக்கு எதிராக போராடிய ஒரு தலைவனுக்கு கிடைத்த உண்மையானபாராட்டுகள் என உலகம் முழுவதும் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் தென்னாபிரிக்க மரபுப்படி, அரசு முறைப்படியும் நல்லடக்க நிகழ்ச்சிகள் அதிகாலை 6 மணிக்கே தொடங்கின. இதில் மண்டேலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், மகள்கள் மகாசிவி மற்றும் லிண்டிவி சிசிலு, அவரது மனைவி கிரேசா மாச்சல், முன்னாள் மனைவி வின்னி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நிகரகுவா துணை அதிபர், தான்சானியா முன்னாள் அதிபரின் மனைவி உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 
தென்னாபிரிக்கா முழுவதிலும் இருந்து பிரமுகர்களும், தலைவர்களும் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான மக்கள் ஊர்வலமாக திரண்டு வந்து மலர்க்கொத்துகளையும், பூக்களையும் வாரி இறைத்தனர்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க மதியம் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. உங்களை பத்திரமாக அனுப்பி வைத்து உள்ளோம். அங்கே உங்கள் ஆத்மா ஓய்வு பெறட்டும் என அதிபர் ஜாக்கோப் ஜூமா உருக்கமாக குறிப்பிட்டார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...