உருலைக்கிழங்கு
அவரைக்காய்
பீன்ஸ்
மத்தங்காய் [பூசனிக்காய்]
சிறிய வெங்காயம் 10
தக்காளி 1
பச்சைமிள்காய் காரத்திற்கேற்ப
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
சீரக சோம்பு [பொடியல்ல] 1 டீஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
உப்பு.
தாளிக்க: தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் [மதி]
கருவேப்பில்லை கடுகு உளுந்து சிகப்பு மிளகாய்.
முதலில் நறுக்கிய காய்கறிகளை உப்பு மஞ்சள்பொடி தண்ணீர் அளவோடு வைத்து முக்கால்வேக்காடு வேகவைய்கவும்
மிக்சியில் பாதிவெங்காயம் பாதிதக்காளி பச்சைமிளகாய் சீரகம்சோம்பு சேர்த்து விழுதாக [ரொம்பநைசாக வேண்டாம்] அரைத்துக்கொள்ளவும்
காய்கறிகள் வெந்ததும் வேறு பாத்திரத்தில் 1 ஸ்பூன் .தேங்காய் எண்ணை ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பில்லை மீதமுள்ள வெங்காயம் தக்காளி சேர்த்துதாளித்து
அதில் காய்கறிகளையும் அரைத்தவிழுதையும் போட்டு
நன்றாக கலந்ததும் 2 நிமிடம் மூடிவைத்து இறக்கவும்
இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது ஒரு சத்துள்ளகூட்டு… வெள்ளைசாதம். ரசம். இக்கூட்டு மதி. வேணுங்கில். சுட்ட அப்பளம். இல்லைங்கில் நாரங்கா அச்சாரு மதி.
6, 7 வருடம். சேச்சிகளின் ஒக்க நின்னு அவாளின் பஷ்ணங்கள் உண்டாக்கியத ஞான் நோக்கியதாம். அதில் இதுவும் ஒருவகையாக்கும். எனக்கு கேரளத்திண்ட பஷ்ணங்கள் வளிய இஷ்டப்பட்டு. புட்டும் கடலக்கறியும். கப்பயும் மீங்கறியும்.
பின்ன செம்மீங்கறியும். பாலப்பமும். இன்னும் இன்னும் பின்னே உங்களுக்கு ஞான் உண்டாக்கிகானிக்கும் [அது யாரானு என்ன விழிக்கின்னது ஓ எண்ட சேச்சியானு தோ இப்ப வாரேன் சேச்சீஈஈஈஈஈஈ] ஒன்னும் விசமிக்கேண்டாம் எண்ட சேச்சி என்ன விழிச்சி ஞான் பின்ன வர ஓகே இப்போ இது மதி
No comments:
Post a Comment