May 6, 2012

இருமலுக்கு மருந்து





தேவையானவை:
சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
கடுக்காய்த் தோல் - 10 கிராம்
நெல்லி வற்றல் - 10 கிராம்

தான்றிக்காய்த் தோல் - 10 கிராம்
அக்கிரகாரம் - 10 கிராம்
சிற்றரத்தை - 10 கிராம்
அமுக்கிராவேர் - 10 கிராம்
கண்டங்கத்திரி வேர் - 10 கிராம்
குப்பைமேனி வேர் - 10 கிராம்
ஆடாதொடை வேர் - 10 கிராம்
தூதுவளை வேர் - 10 கிராம்
துளசி வேர் - 10 கிராம்
பசும்பால் - 100 மி.லி.


செய்முறை
சுக்கைத் தோல் நீக்கவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும். திப்பிலியையும் ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும்.


கடுக்காய்த் தோலை வெய்யிலில் காய வைத்துக் கொள்ளவும். நெல்லி வற்றலில் உள்ள விதைகளை விலக்கவும். அதிமதுரத்தைத் தட்டி ஒரு மண் சட்டியில் போட்டு 100 மி.லி.



பசும்பாலை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும். சிற்றரத்தையைத் தட்டிக் கொள்ளவும். அமுக்கிரா வேரைத் தட்டிக் கொள்ளவும்.


கண்டங்கத்திரி வேர், குப்பைமேனி வேர், ஆடா தொடை வேர்,
தூதுவளை வேர், துளசி வேர், இவைகளை நன்கு உலர்த்திக் கொள்ளவும்.


எல்லாச் சரக்குகளையும் ஒன்றாகப் போட்டு இடித்துச் சலித்துக் கொள்ளவும். சலித்த தூளை ஒரு மண் பானையில் போட்டு மண் தட்டால் மூடி காற்றுப் புகாமல் துணியால் கட்டி 3 நாட்கள் வைத்திருக்கவும். பின்பு மருந்தை எடுத்துக் கண்ணாடிப் புட்டியில் பத்திரப் படுத்தவும்.

***

மருந்துண்ணும் முறை

காலை உணவுக்கு 1 மணி முன் 1 தேக்கரண்டித் தூளை 1 தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளவும்.


மாலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டித் தூளுடன் 1 தேக்கரண்டி பனை வெல்லத்தைக் கலந்து 7 நாட்கள் சாப்பிடவும்.

***

கண்டிப்பாக நீக்க வேண்டியவை

உருளைக் கிழங்கு, கடலை வகைகள், புளிக் குழம்பு, தயிர், இளநீர், குளிர்ந்த பானங்கள், மாமிச உணவு. மது வகைகளையும் நீக்கவும்.


***


சிறப்பு உணவு

மிளகுப் பொங்கல், மோர், தேன், நெய், இளங்காய்கள், இடியாப்பம், இட்லி, புழுங்கலரிசிச் சாதம், வெந்நீர்.

***


குறிப்பு
குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டித் தூளை 4 பங்காக்கி 1 பங்கை 1 தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...