May 10, 2012

துளசி

துளசி இலைச்சாறு 5 துளியளவு எடுத்து தாய்பாலில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளித் தொல்லை நீங்கிவிடும்.

துளசி வேரும், சுக்கும் சமஅளவு எடுத்து மை போல் அரைத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். துளசி இலை 10ம் இரண்டு சிட்டிகை ஓமமும் சேர்த்து
அரைத்து 100 மில்லி தண்ணீரில் கலக்கிச் சாப்பிட்டால் அம்மை நோய்கண்டவர்களுக்கு ஏற்படும். கடுமை குறையும்.

துளசி இலைச்சாறு 30 மில்லியில் அரைத் தேக்கரண்டி உப்பு சேர்த்து தினமும் காலையில் ஒரு வேளை கொடுத்து வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள காக்கை வலிப்பு குணமாகும். வலிப்பு வரும்போது இச்சாற்றை மூக்கில் விட்டால் வலிப்பு உடனே நிற்கும். துளசிப்பொடி, வேப்பம்பூம்பொடி, நாவல் கொட்டைப்பொடி நெல்லிக்காய்ப்பொடி இவற்றைச் சமமாகச் சேர்த்து தினசரி அரைத் தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மூன்று மாதத்தில் நீரிழிவு கட்டுப்படும்.

பிரைமரி காம்ப்ளக்ஸ் நோயும் இதன் விளைவாக ஏற்படும் தொண்டைச் சளி இருமலுக்கும் ஆறிய வெந்நீரில் துளசி இலை 10 போட்டு, இரவு வைத்திருந்து காலை, மாலை அரை டம்ளர் தண்ணீரைக் குடிக்கச் செய்தால் சில தினங்களில் நோய்க் கடுமை தணியும். துளசி இலைச்சாறும், ஆடா தொடை இலைச்சாறும் சமமாகக் கலந்து, தினம் இரண்டு வேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டால் சலதோஷம் நீங்கி விடும். அனைத்து வாயுத் தொல்லைகளுக்கும், மாலைக் கண் நோய்க்கும், கண்பார்வை தெளிவடையவும் துளசிச்சாறு பருகி வருவதால் நிவர்த்தியாகிறது.

துளசி விதையைப் பொடியாக்கி பாலில் கலந்து கொடுத்தால் வாந்திபேதி குணமாகும். தேள் கொட்டிய இடத்தில் துளசி இலையைக் கசக்கித் தேய்த்து கொட்டிய இடத்தில் துளசியை வைத்து, சிறிது சூடுகாட்டினால் கடுப்பும் வலியும் நீங்கும்.

துளசிச் சாற்றில் இதன் பூக்கள், காம்புகள் சுக்கு ஆகியவற்றைச் சிறிது தேன் விட்டு கலந்து கொடுத்தால் பாம்புக்கடி விஷம் தீரும்.

துளசி இலையை இரண்டு கைப்பிடியாக மென்று தின்று, கடிவாயில் துளசியை அரைத்து வைத்துக் கட்டினாலும் விஷம் முறிந்து விடும். கடிபட்டவர் வாய்வழியாகத் தின்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டால் உச்சந்தலையில் ரத்தம் வரும் வரை கீறிவிட்டுத் துளசி அரைத்த விழுதை வைத்துக் கட்டியும், மூக்கிலும், வாயிலும் துளசிச் சாற்றை விட்டும் வந்தால் பாம்பு நஞ்சு முறிந்து விடும்.

துளசியைப் பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை ஒருதேக்கரண்டி வீதம், வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டால், மண்டைப்பீனிசம் அடுக்குத்தும்மல், இருமல் சளி, தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு முதலிய நோய்கள் தீரும். துளசி மருத்துவம் செலவில்லாதது. எளிய முறையில் பயன்படக் கூடியது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...