May 24, 2012

நடைப்பயிற்சி தரும் நன்மை


இளம் காலைப்பொழுதிலும், சூரியன் மறையும் முன் உள்ள மாலைப் பொழுதிலும் பூங்காவில், கடற்கரையில், ஆற்றங்கரையில் அல்லது திறந்த வெளில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதற்கு தேவையான நடைக் காலணி அணிய வேண்டும். பருத்தி ஆடை அணிவது நல்லது. தினமும்  45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இளைஞர்கள் கூடுதல் நேரம் நடக்கலாம். விளையாடுவது,ஓடுவது போன்ற பயிற்சிகளும் இளைஞர்களுக்கு ஏற்றது. எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்று நடைப்பயிற்சி தான். சாலைகளில் மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில் அல்லது வாகனப் போக்குவரத்து உள்ள இடங்களில் நடப்பது தவறு. கடும் வெயிலில் நடக்கக் கூடாது.

நன்றாக வியர்வை வெளிவருமாறு நடைப்பயிற்சி  இருக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து இருக்க கூடாது. அந்த இருக்கையில் இருந்து எழுந்து சிறிது நேரம் நடை பயில வேண்டும். கம்ப்யூட்டரில் பணி புரிபவர்கள்  இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் மோட்டர் சைக்கிள் அல்லது காரில் செல்லக்கூடாது.

அருகில் இருக்கும் வீடு, அலுவலகம் அல்லது கடைகளுக்கு நடந்து செல்லப்பழக வேண்டும். மாடியில் வீடு உள்ளவர்கள் அல்லது அலுவலகத்தில் பணி புரிபவர்கள் தினமும் ஒரு தினமும் ஒரு முறையாவது லிப்ட்டைப் பயன்படுத்தாமல் படிகளில் ஏறி இறங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...