இந்த கோடையிலும், நம் வாழ்வில் வசந்த தென்றல் வீச சில எளிய வழிகள்;
(1) தண்ணீர்...தண்ணீர் ;
தண்ணீரை விட, கோடையை சமாளிக்க வேறு மருந்து இல்லை. வஞ்சனையில்லாமல் நிறைய தண்ணீர் பருகுங்கள்.இதனால், நம் உடலில் இருக்கும் நீர் வரண்டு போகாது. ஆனால், ஒன்று. குடிக்கும் நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். மலிவு விலை தண்ணீர் பாக்கெட்டுகளை உபயோகிக்காமல் இருப்பது நலம்.
(2) தளர்வான ஆடைகளை அணியுங்கள்;
கோடைமுடியும் வரை முடிந்த அளவு தளர்வான ஆடைகளையே அணியுங்கள். காட்டன் துணிகளை அணிவது சிறப்பு. கறுப்பு நிற ஆடைகள், வெப்பத்தை இழுக்கும் தன்மை உடையதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
(3) இளநீர், மோர் பருகுங்கள்;
கோக், பெப்சி போன்ற குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. தினமும் ஒன்று அல்லது இரண்டு இளநீர் குடிக்கலாம்.மோர் குடிப்பதும் நல்லது. கெட்டி தயிர் உடலுக்கு சூடு கொடுக்கும் என்பதால்,அதை கோடை முடியும் வரை தவிர்த்து விடுங்கள்.
(4) 2 தடவை குளியுங்கள்;
நாட்டில் இருக்கும் தண்ணீர் பற்றாக்குறைக்கு, இது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் வெயிலை சமாளிக்கும் best வழி இது தான். காலை, மாலை இரண்டு வேளைகளும் பச்சை தண்ணீரில் குளிப்பது உடல் சூட்டை தணிக்கும்.
(5) எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்;
வாரம் ஒரு முறையாவது, தலைக்கு எண்ணெய் தடவி, தலைக்கு குளிப்பது நல்லது.
இவையெல்லாம், காலம்காலமாக தெரிந்த விஷயங்கள்தான், இருந்தாலும், நல்ல விஷயங்களை மீண்டும் சொல்வதில் தவறில்லைதானே!
No comments:
Post a Comment