
மாதவிலக்கு பெண்களில் உடல்ரீதியான மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பது
போலவே, மாதவிலக்கு விடைபெறும் மொனோபாஸ் காலமும் பெண்களின் உடலியல்
மாற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்தப்பருவத்தில் பெண்களுக்கு
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக
ஆய்வுகள தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் மெனோபசை எட்டிய 45 சதவீதம் பெண்கள் இதய பாதிப்புகளால்
இறந்ததுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. தினமும் இரண்டு ஆப்பிள்
சாப்பிடுவது இதய பிரச்சனையில் இருந்து தப்பிக்க சிறந்த வழி என்று புளோரிடா
பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு உலர்ந்த ஆப்பிள் மற்றும் சாதாரண ஆப்பிள்
பழங்கள் கொடுத்து ஓராண்டு காலம் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கெட்ட
கொழுப்பின் அளவு நல்ல விதமாக கட்டுப்படுத்தபடுவதால் மாரடைப்பு போன்ற இதய
பாதிப்புகள் கட்டுப்படுவதாக ஆய்வு முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment