Aug 24, 2012

உலகின் பழமை வாய்ந்த பெராரி சொகுசு கார் புதுப்பிப்பு


ரூ.44 கோடி மதிப்பு மிக்க



நியூயார்க் : இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட உலகின் மிகப் பழமையான பெராரி கார் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் அற¤முகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஜிம் கிளிக்கென்ஹாஸ் என்பவர் இந்த காரை இப்போது வைத்துள்ளார். பெராரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ''166 ஸ்பைடர் கோர்சா'' என்ற இந்த கார் 12 சிலிண்டர்களை கொண்டது. 160 கி.மீ. வேகம் வரை ஓடக்கூடிய இந்த கார் 1947ல் நடைபெற்ற டுரின் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது.

கார் உரிமையாளர் ஜிம் கிளிக்கென்ஹாஸ் கூறுகையில், ''2004ம் ஆண்டில் ஏலம் மூலம் 4 கோடி 23 லட்சத்து 50,000 ரூபாய் செலவில் இந்த காரை வாங்கினேன். இதை இப்போது 2.75 கோடி செலவில் புதுப்பித்துள்ளேன். இதில் சேசிஸ், இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான உதிரி பாகங்கள் இப்போதும் ஒரிஜினலாகவே உள்ளன. இது இப்போது ஸி44 கோடிக்கு விலை போகும்.

இந்த காரை இத்தாலியில் உள்ள பெராரி கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு கொண்டு சென்றேன். அங்கு பழைய இயந்திரங்கள் பாரம்பரிய சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் புகைப்படங்கள், உதிரிபாகங்கள் மற்றும் இந்த கார் குறித்து தெரிந்துள்ளனர். அவர்கள் இந்த கார் ஒரிஜினல் உதிரிபாகங்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...