அமெரிக்காவில் உள்ள லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ள ஐசக் புயல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடலில் ஏற்பட்ட ஐசக் புயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.
மேலும் லூசியானா, மிஸ்சிசிப்பி, அலபாமா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
23 உள்ளாட்சி அமைப்புகள், 13 தகவல் தொடர்பு மையங்கள், 921 அவசரகால பாதுகாப்பு வாகனங்கள், 531 அதிக நீர் மேல் மிதக்கும் வாகனங்கள், 40 விமானங்கள், 74 படகுகள் மற்றும் 35,000 நிவாரண படைவீரர்களுடன் பெரிய முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அதிபர் ஒபாமா நேற்று அவசர நிலையை அறிவித்ததை அடுத்து அங்குள்ள அனல்மின் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன நிறுவனங்கள் மூடப்பட்டது.
இதனிடையே லூசியானா மேயர் வெளியிட்ட செய்தியில், “புயல் தாக்கினால் சேதமும், வெள்ளப்பெருக்கும் பெருமளவில் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எச்சரிக்கையையும், மிரட்டலையும் மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
வளைகுடா பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று அங்கிருந்து வெளியேற வேண்டும். எச்சரிக்கைகளை கடுமையாக பரிசீலித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். அரசு உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment