அமெரிக்காவில்
அட்லாண்டிக் கடலை ஒட்டிய வட கிழக்கு மாகாணங்களில் சூறாவளி புயல்
வீசுகிறது. இப்புயல் நியூயார்க் நகரை நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது.
அடுத்தடுத்து 2 சூறாவளி புயல்கள் தாக்கின.
முதலில்
வீசிய புயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மரங்கள் தூசிகளும், மணலும்
வாரி இறைக்கப்பட்டது. அடுத்த 20 நிமிடங்களில் மற்றொரு புயல் தாக்கியது.
இது மிகவும் கடுமையாக இருந்தது. நியூயார்க்கில் அதை சுற்றியுள்ள 10 மைல்
சுற்றளவும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இத் தாக்குதலில் வீடுகள் தரை
மட்டமாயின. மரங்கள் வேருடன் சாய்ந்தன. ரோடு களில் சென்ற கார் உள்ளிட்ட
வாகனங்கள் தலை குப்புற கவிழ்ந்தன. மின்சாரமும் டெலிபோன் இணைப்புகளும்
துண்டிக்கப்பட்டன.
No comments:
Post a Comment