Oct 16, 2012

மைக்ரோசாப்ட் நிறுவனம் சென்ற ஜூன் மாதம், தான் வடிவமைத்து தயாரிக்கும் சர்பேஸ் டேப்ளட் பிசி மற்றும் விண்டோஸ் போன் 8 குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது.

இவை இரண்டும் இந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. சர்பேஸ் டேப்ளட் அக்டோபர் 25 அன்றும், விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29 அன்றும் வெளியிடப்படும்.

சர்பேஸ் ஆர்.டி. டேப்ளட் பிசியில் 10 அங்குல திரை, டச் ஸ்கிரீன் டிஸ்பிளே சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ஏ.ஆர்.எம். ப்ராசசர் இயங்கும். 

மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், யு.எஸ்.பி.2 போர்ட், மைக்ரோ எச்.டி. வீடியோ, சிறப்பான வைபி இணைப்பிற்காக 2x2 MIMO ஆன்டென்னா ஆகியவை தரப்படும். 

விண்டோஸ் 8 போன் வெளியிடப்படுகையில், முழுமையான இதன் பயன்பாடு காட்டப்படும். 

நோக்கியாவின் லூமியா மற்றும் எச்.டி.சி. யின் இணையான போன்கள் வெளியிடப்பட இருப்பதால், மைக்ரோசாப்ட் நிறுவனமும் தன் ஸ்மார்ட் போன் வெளியீடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...