Oct 14, 2012

துருக்கி விமானங்களுக்கு சிரியா தடை


தமது வான்பகுதியில் துருக்கி நாட்டின் பயணிகள் விமானங்கள் பறக்க சிரியா அரசு தடை விதித்துள்ளது. தமது பயணிகள் விமானத்துக்கு துருக்கி தடை விதித்ததற்கு பதிலடியாக சிரியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனினும், சிரியா விமானங்களுக்கு துருக்கி அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கவில்லை.
கடந்த வியாழக்கிழமை ரஷியாவின் மாஸ்கோவிலிருந்து டமாஸ்கஸ் நகருக்கு சென்றுகொண்டிருந்த சிரியா பயணிகள் விமானத்தில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் துருக்கி விமான நிலைய அதிகாரிகள் அந்த விமானத்தை அங்காராவில் அவசரமாக தரையிறங்க வைத்தனர். இந்தப் புகாரை சிரியாவும் ரஷியாவும் மறுத்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை வழக்கம் போல துருக்கி வான்பகுதியில் சிரியா விமானம் பறக்க அனுமதிக்கப்பட்டது. எனினும், சிரியா வான்வழியில் பறப்பதை துருக்கி விமானங்கள் நிறுத்திக் கொண்டன. இந்நிலையில்தான் துருக்கி விமானங்களுக்கு சிரியா தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் பரஸ்பரம் ராணுவத் தாக்குதல் நடைபெற்ற நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...