Oct 2, 2012

ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை



ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரு முறை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானின் ஹோன்சூகு மாகாணத்தின் மியாக்கோ கடற்கரையில் 9.7 கி. மீ. ஆழத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுககம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகவும், 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் அதே கடற்கரை பகுதியின் 107கி.மீ. தொலைவில், 34 கி.மீ. கடல் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆட்டம் கண்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் ‌‌தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...