Oct 11, 2012

நோய்கள் தோன்றும் விதம் , நோயனுகா விதி


தன் மனையாலுந் தானுமிருக்கையில்
தாவி வேறுமனை தேடிப்புகுந்தாலும்
நன் மனைவியின் போகமிகுந்தாலும்
நல்லுனவென்றதிகம்  புசித்தாலும்
வன்மையாகக் குறைத்துப் புசித்தாலும்
மாலையி லெண்ணெய்முழுகி குளித்தாலும்
சின்னமா மலச்சிக்க லிருந்தாலும்
தேடிப்பாரில் வியாதிகள் வருமே
யாகோபு வைத்தியம் -300

தனக்குத் துணையாகிய மனைவியை விட்டு வேறு பெண்களிடம்  தொடர்பு கொண்டாலும்,தன் மனைவியிடம் அதிகம் போகம் கொண்டாலும்,ருசியான உணவு வகைகளை அதிகம் உண்டாலும்,காலம் தவறி உணவுகளை குறைத்து உண்பதாலும்,மாலை நேரத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி குளித்தாலும்,மலச்சிக்கல் இருந்தாலும் அவர்களுக்கு வியாதிகள் தேடி வரும்

இவைகள் மட்டும் அல்லாமல் உடலில் வாதம்,பித்தம்,கபம் என்ற மூன்று வித நாடிகளின் வேறுபாடுகளாலும்,இயற்கையின் கால சூழ்நிலைகளின் வேறுபாடுகளாலும்,நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் நோய்கள் வரும்.

---------------------------------------------------------------------------------------

நோயனுகா விதி
நாளி ரண்டு
வாரமிரண்டு
மாதமிரண்டு
வருடமிரண்டு
என்பது சித்தர்கள் வகுத்த மருத்துவ மொழியாகும்

நாளிரண்டு  :   ஒவ்வொரு நாளும் இருமுறை மலம் கழிக்க வேண்டும்.
வாரமிரண்டு : வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
மாதமிரண்டு:மாதம் இருமுறை மட்டும் உடல் உறவு கொள்ள வேண்டும்.
 வருடமிரண்டு:ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டு வயிற்றை சுத்தம் செய்யவேண்டும்.

இவற்றை கடை பிடித்தால் நோய்கள் உடலில் தோன்றாது.இவைகள் மட்டும் இல்லாமல் கர்ம வினைகளாலும் நோய்கள் தோன்றும் என்று அகத்தியர் பெருமான் கூறுகின்றார்.அதைப் பற்றிய விளக்கங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி!
இமயகிரி சித்தர்  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...