Oct 10, 2012

செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருளை கண்டிபிடித்தது கியூரியாசிட்டி

 செவ்வாய் கிரகத்தில் ஒளிரும் பொருளை கண்டிபிடித்தது கியூரியாசிட்டி


வாஷிங்டன், அக்.10(டி.என்.எஸ்) அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தினால், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்ட கியூரியாசிட்டி என்ற ஆய்வுக்குட விண்கலம், அங்கு ஒளிரும் ஒரு பொருளை கண்டுபிடித்து சாதனைப்படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு நடத்தும்

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், சமீபத்தில் கியூரியசிட்டி என்ற ஆய்வுக்கூட விண்கலத்தை அனுப்பியது. இரண்டு ஆண்டுகள் தங்கி ஆய்வு மேற்கொள்ள இருக்கும் அந்த விண்கலம் தற்போது பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

அங்கு சென்ற அந்த விண்கலம், முதலில் அங்குள்ள பாறைகளை வெட்டி அதை ஆராய்ந்தது. பிறகு செவ்வாய் கிரகத்தை பல கோணங்களில் படம்பிடித்து அனுப்பியது. இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி அனுப்பிய புகைப்படத்தில் செவ்வாய் கிரக மண்ணில் ஒரு ஒளிரும் பொறுள் உள்ளது. அது என்னவாக இருக்கும் என விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இது விண்கலத்தில் இருந்து கழன்று விழுந்த அதன் ஒரு பாகமாக இருக்கலாம் என்றும் நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதே சமயத்தில் சில விஞ்ஞானிகள் கியூரியாசிட்டி விண்கலத்தின் ரோபோவின் வெளிச்சமாகவும் அது இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் அந்த புகைப்படத்தை வைத்து நாசா மையம் பலவகையில் ஆய்வு செய்து வருகிறது.(டி.என்.எஸ்)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...