அன்பர்களுக்கு வணக்கம், என்னை ரொம்ப கவர்ந்த தொழிற்களம் மேல நான் இப்ப
கோபமா இருக்கேன், எனக்கு ரொம்ப பிடிச்ச விசயங்களை பத்தி எழுத சொன்னா
தினமும் 1 பதிவுங்கறதுங்கறது சாதாரணமா போய்டும், தொழிற்சார்ந்த
பதிவுங்கறதால எனக்கு எதுவும் பிடிபடலை.
ஆனாலும் இதுல பெரிய நல்ல விசயம் இருக்கு, இப்படி எழுதனுங்கறதுக்காகவே ரொம்ப
நாளா இணையம் இருந்தும் தெரிஞ்சுக்காம விட்ட பல விஷயங்களை இப்ப
தெரிஞ்சுகிட்டு எழுத துவங்கறேன், எல்லா விஷயமும் ஆரம்பத்துலயே
எல்லாருக்கும் வந்துடாது, பழக பழக சரியா போயிடும்னு நம்பி புது களத்துல
எழுத துவங்கறேன்.
இன்று நாம் தெரிந்து கொள்ள போவது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை எவ்வாறு
நம் நாட்டில் நிர்ணயிக்கப் படுகிறது என்பதை பற்றி. தினமும்
தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் பொழுது வானிலை அறிக்கைக்கு முன்பாக
வாசிக்கப்படும் வாணிப செய்திகளில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய
விலை நிலவரம் பற்றி கூறுவார்கள், தினம் தினம் இதன் விலை மாறுபடுவது ஏன்?
எதனை பொறுத்து மாறுகிறது என்பதனை காண்போம்.
தங்கம் மற்றும் வெள்ளியானது உலக சொத்தாக கருதப்படும் பொருட்கள், அவற்றின்
விலை உலகம் முழுவதும் ஒரே மாதிரி சீராக இருக்க வாண்டியது கட்டாயமாக்கப்பட்ட
ஒன்று, அந்தந்த நாட்டின் பண மதிப்பினை பொறுத்தே தங்கம் மற்ரும் வெள்ளியின்
விலை மாறுபடுகிறது.
அடிப்படையில் தங்கத்தின் விலையானது TROY-OUNCE ல் இருக்கும், அதாவது
TROY-OUNCE என்பது எடையினை அளக்கப் பயன்படும் அடிப்படை அலகு. அதிலிருந்து
கிராமுக்கு எவ்வளவு என்பது கணக்கிடப் படும், பின்பு ஒரு கிராம் தங்கத்தின்
விலை டாலரில் மதிப்பிடப்பட்டு பின் ரூபாய்க்கு கணக்கிடப்பட்டு இறக்குமதி
வரியுடன் தங்கத்தின் விலையாக அறிவிக்கப்படும்.
உதாரணத்திற்கு இங்கு குடுத்திருக்கும் கணக்கீட்டினை பாருங்கள்.
அமெரிக்க தற்போதைய 1 ட்ராய்-அவுன்ஸ் தங்கம் விலை = 1750 $
1 ட்ராய்-அவுன்ஸ் = 32,15 கிராம்.
1 கிராம் தங்கத்தின் விலை = 1750 / 32,15 = $ 54,50
1 டாலர் = 49 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்
இந்திய ரூபாய்க்கு கிராம் தங்கம் விலை= 54,10 x 49 = 2670.05
இறக்குமதி வரி [2%] = 2670.05 + 53.43
1 ட்ராய்-அவுன்ஸ் = 32,15 கிராம்.
1 கிராம் தங்கத்தின் விலை = 1750 / 32,15 = $ 54,50
1 டாலர் = 49 ரூபாய் என்று வைத்துக் கொண்டால்
இந்திய ரூபாய்க்கு கிராம் தங்கம் விலை= 54,10 x 49 = 2670.05
இறக்குமதி வரி [2%] = 2670.05 + 53.43
இந்தியாவில் கிராமுக்கு = 2723,50.
இந்த கணக்கீடு கணிணியில் நேரடியாக MICROSOFT EXCELல் செய்ய படுகிறது.
No comments:
Post a Comment