Nov 14, 2012

இன்று சூரிய கிரகணம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் தெரிந்தது


 Solar Eclipse Darkens North Australia
சிட்னி: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டது.
சூரியன்-பூமிக்கு இடையே சந்திரன் வரும்போது ஏற்படுவது தான் சூரிய கிரகணம். இதனால் சூரியனை நிலவு மறைப்பது போல பூமியில் இருப்பவர்களுக்குத் தெரியும்.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று ஏற்பட்டது. இது ஆஸ்திரேலியாவின் வட பகுதியில் மிகத் தெளிவாகத் தெரிந்தது. இந்த சூரிய கிரகணத்தால் பகலிலேயே 2 நிமிடங்கள் வட ஆஸ்திரேலியா இருளில் மூழ்கியது.
இதை வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், வானியல் நிபுணர்கள், பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
மேலும், கிழக்கு இந்தோனேஷியா, ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியின் சில இடங்களிலும், நியூசிலாந்து, கிழக்கு இந்தோனேஷியா, பப்புவா நியூகினியா தீவுகள் மற்றும் சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தென் பகுதியிலும், தென் பசிபிக் பெருங் கடல் பகுதியிலும் இந்த கிரகணம் தெரிந்தது.

அடுத்த சூரிய கிரகணம் வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் ஏற்படவுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...