Nov 15, 2012

ப‌‌த்‌திர‌ப்படு‌த்‌தி வை‌க்க ‌சில தகவ‌ல்க‌ள்---வீட்டுக்குறிப்புக்கள்,


கடை‌யி‌ல் மாவு அரைத்து எடு‌த்தது‌ம் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து வைக்க வேண்டும். சூ‌ட்டோடு சூடாக எடு‌த்து வை‌த்து‌வி‌ட்டா‌ல் ‌‌சீ‌‌க்‌கிர‌ம் வ‌ண்டு ‌பிடி‌த்து‌விடு‌ம்.

உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் வைக்கவும்.


உல‌ர்‌ந்த பழங்களுட‌ன் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.


உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் ஃப்‌ரீச‌ரி‌ல் வைத்தால் நீண்ட நாட்களுக்கு ந‌ன்றாக இரு‌க்கு‌ம்.


சாம்பார் பொடியை கொஞ்சமாக அரைத்து வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். ஏனெ‌னி‌ல் அ‌திக நா‌ட்களு‌க்கு சா‌ம்பா‌ர் பொடியை எடு‌த்து வை‌ப்பதா‌ல் அத‌ன் வாசனையை இழ‌க்‌கிறது.


அ‌திகமா அரை‌த்து ‌வி‌ட்டீ‌ர்களா? சா‌ம்பா‌ர் பொடியை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்தா‌ல் எப்போதுமே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.


கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழு‌வி உலர வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வை‌க்கலா‌ம்.


சமை‌ப்பத‌ற்கு மு‌ன்பு பூ‌ண்டை தோ‌ல் உ‌ரி‌த்து கா‌ற்றாட வை‌த்தா‌ல் அ‌தி‌ல் ‌சி வை‌ட்ட‌மி‌ன் அ‌திக‌ரி‌க்கு‌ம். அதனை சமையலு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். நசுக்கிய பூண்டை நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடாது. 
சிபொரு‌ட்க‌ளஎடு‌த்தவை‌த்தகாளு‌மமுறநமதஊ‌ர்க‌ளி‌லஉ‌ண்டு. உதாரணமாஊறுகா‌ய், நெ‌யபோ‌ன்றவை. அதுபோ‌ன்றவ‌ற்றபராம‌ரி‌ப்பதஎ‌ப்படி எ‌ன்பதபா‌ர்‌க்கலா‌ம்.

சுடு த‌ண்‌ணீ‌ரி‌ல் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தை விட அதிக நேரம் சூடாக இருக்கும்.

கடையிலிருந்து கோதுமை, கேழ்வரகு, மிளகாய், தனியா போன்றவைகளை வா‌ங்‌கி வ‌ந்து அரை‌க்க‌க் கொடு‌ப்பத‌ற்கு மு‌ன்பு அதைன சு‌த்த‌ம் செ‌ய்து க‌ல், தூசு போ‌ன்றவ‌ற்றை ‌நீ‌க்‌கி ‌விடு‌ங்க‌ள்..

பி‌ன்ன‌ர் சூ‌ரிய ஒ‌ளி‌யி‌ல் காய வை‌த்து ‌பி‌ன்ன‌ர் அரை‌க்க‌க் கொடு‌ங்க‌ள். கடைக‌ளி‌ல் இதுபோ‌ன்று எதை வா‌‌ங்‌கினாலு‌ம் வெயிலில் காய வைப்பது சுகாதார பூர்வமானது.

வெண்ணெய் காய்ச்சும்போது சிறிது முருங்கை இலையைப் போடுவதால் நெய் வாசனை கெடாமல் இருக்கும்.

நெ‌ய் காய்ச்சி சூடு ஆறியதும் அடியில் தங்கும் கசடை அகற்றிவிட வேண்டும்.

சிறிதளவு புளியை உருட்டி கடலை எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் கெடாதிருக்கும்.

தேங்கா‌ய் ப‌த்தையை தயிரில் போட்டு வைத்தால் இரண்டு நாள்கள் தயிர் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்.



கூடையில் பச்சை காய்கறிகளைப் போட்டு ஈரத்துணியால் மூடிவைத்தால் மூன்று நாள்வரை வாடாமல் இருக்கும்.
கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...