- FRIDAY, 01 FEBRUARY 2013
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் 166வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று திருவையாற்றில் சுமார் 1000 இசைக்கலைஞர்கள் பங்குகொண்ட பஞ்சரத்ன கீர்த்தனை இசை விருந்து கண்கவர் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தபப்டும் தியாகராஜர் ஆராதனை விழா கடந்த ஐந்து நாட்களாக திருவையாறில் நடைபெற்று வந்தது. நேற்று தியாகராஜர் சுவாமிகளின் முக்தி தினம் என்பதனால், பிரதான நிகழ்வாக பஞ்சரத்ன கீர்த்தனைகள் இடம்பெற்றன. சுமார் 100க்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில் கீர்த்தனைகள் பாடி இசைத்தனர். பிரபல பின்னணி பாடகர்கள் யேசுதாஸ், விஜய் யேசுதாஸ், சீர்காழி சிவசிதம்பரம், உன்னி கிருஷ்ணன், சுதா ரகுநாதன் ஆகியோரும் இசைக்கலைஞர்கள், மகதி, அருண், சுமா சுசித்ரா, கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, பிரியா சகோதரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் தியாகராஜர் சுவாமிகள், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகள் இயற்றினார். அதில் பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் தியாகராஜர் சுவாமிகள், தெலுங்கு மொழியில் எண்ணற்ற கீர்த்தனைகள் இயற்றினார். அதில் பஞ்சரத்ன கீர்த்தனை புகழ்பெற்றது.

















No comments:
Post a Comment