Feb 8, 2013


மும்பைக்கு எதிராக ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக 14 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 169 பந்துகளில் 134 ரன்கள் விளாசிய சுரேஷ் ரெய்னா, வாய்ப்பு கிடைத்தால் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முரளி விஜய் சதம் எடுக்க பின்னால் களமிறங்கிய ரெய்னா அற்புதமாக விளையாடி 134 ரன்களை விளாசினார் இதனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 526 ரன்களை எடுத்துள்ளது.

மும்பை அணி சற்று முன் வரை 3ஆம் நாளான இன்று 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

ஜாபர் 80 ரன்களுக்கு ஸ்ரீசாந்திடம் வீழ்ந்தார். அஜின்கியா ரஹானே 83 ரன்கள் எடுத்து சற்று முன் ஹர்பஜன் சிங்கிடம் எல்.பி. ஆனார். சச்சின் டெண்டுல்கர் 64 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 39 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். ரோகித் சர்மா களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் சதம் எடுத்த ரெய்னா கூறியதாவது:

"நான் பந்துகளை நன்றாக அடிக்கிறேன், கடைசி 4 அரைசதங்கள் மற்றும் இப்போதைய சதம் எனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுக்காதது ஏமாற்றமளித்தது.

ஆனால் மும்பைக்கு எதிராக இரானி கோப்பையில் சதம் எடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. கடவுள் என்பக்கம் இருக்கிறார்" என்றார் ரெய்னா.

இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா துவக்க போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார சதம் எடுத்தார். அதன் பிறகு இங்கிலாந்து தொடர், நியூசீ. க்கு எதிரான டெஸ்ட்களில் சோபிக்கவில்லை.

"வெறும் 100 மட்டும் எடுப்பது என் நோக்கமல்ல, 150, 160 என்று பெரிய சதங்களை எடுப்பதுதான் மன ரீதியாக ஒருவரை கடினமாக மாற்றும்" என்கிறார் ரெய்னா.

நேற்று எடுத்த சதம் அவரது 11வது முதல் தர கிரிக்கெட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...