பட்டு சேலையை பராமரிப்பது ஒரு தனி ஸ்டைல். முறையாக பராமரித்து வந்தால் பல ஆண்டுகளுக்கு உபயோகிக்க முடியும். பட்டுப்புடவை பராமரிப்பிற்கு சில எளிய டிப்ஸ்:- விஷேசங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு புடவையை களைந்து உடனே மடித்து வைக்க கூடாது. நிழலில் காற்றாட 2 அல்லது 3 மணி நேரம் உலரவிட்டு பின்பு அதனை கைகளால் அழுத்தி தேய்த்து மடித்து எடுத்து வைக்கவேண்டும். சாதாரண தண்ணீரால் மட்டும் அலசினால் போதுமானது.
எக்காணரத்தை கொண்டும் பட்டுப்புடவையை சூரியஒளி படும்படி வைக்க கூடாது. பட்டு புடவையின் மீது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் போன்ற கடினமான கறைகளாக இருந்தால் அந்த இடத்தில் விபூதியை போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை
வைத்து பின்பு தண்ணீர் விட்டு அலசவேண்டும். அடிக்கடி அயர்ன் செய்வதை தவிர்க்க வேண்டும், அயர்ன் செய்யும் பொழுதும் ஜரிகையை திருப்பிப்போட்டு அதன் மேல் லேசான துணி விரித்து அதன் பின்பு அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்யக்கூடாது.
பட்டுப்புடவைகளை அட்டை பெட்டிகளிலோ, பிளாஸ்டிக் கவர்களிலோ வைப்பதை காட்டிலும் துணிப்பைகளில் வைத்தல் அதன் தன்மையை பாதுகாக்கும். வருடக்கணக்கில் பட்டுபுடவையை தண்ணீரில் நனைக்காமல் வைக்க கூடாது. பயன்படுத்தாமல் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலரவிட வேண்டும். பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும், பார்டர் ஒரு கலரிலும் இருந்தால், முந்தானையையும், பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டி, தண்ணீரில் படாமல், உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம்.
பிறகு அதைக் காய வைத்து, அடுத்து பார்டர், முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த வேண்டும். பட்டைத் துவைக்காமலோ, பாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால், வியர்வை பட்டு, அதிலுள்ள உப்பு, ஜரிகைப் பகுதியை அரித்து விடும்.
No comments:
Post a Comment