- இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் தரையிறங்கும்போது ஓடுதளத்தை விட்டு விலகி கடலில் இறங்கிய விமானம்.
இந்தோனேசியாவில் டென்பாசார் விமான நிலையத்தில் தரை
இறங்க வேண்டிய விமானம் ஓடுதளத்திலிருந்து விலகி கடலுக்குள் பாய்ந்தது.
சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
இந்தோனேசியாவில் பாலி மாகாணத்தில் உள்ள சுற்றுலா நகரான டென்பாசாரில் இந்த சம்பவம் நடந்தது. லயன்ஏர் பயணிகள் விமான நிறுவனத்தின் போயிங் விமானத்தில், ஐந்து சிறுவர்கள் ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 101 பயணிகள், 7 விமானப் பணிக் குழுவினர் இருந்தனர்.
இந்த விமானம் இறங்கும்போது ஓடுதளத்தில் இறங்காமல் விமான நிலையத்துக்கு அடுத்திருந்த கடலில் இறங்கிவிட்டது. இறங்கிய வேகத்தினால் நடுப்பகுதியில் உடைந்து, விமானம் இரு துண்டாகியது. அப்போது வானிலை சாதாரண நிலையில் இருந்தபோதிலும் விமானம் ஏன் கடலில் இறங்கியது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சில பயணிகள் லேசான காயம் அடைந்துள்ளனர். குறைந்த கட்டணம் வசூலிக்கும் லயன்ஏர் விமான சேவை நிறுவனம் 2012-ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.

No comments:
Post a Comment