Apr 27, 2013

உலகையே அசைத்தவரின் மறுபக்கம்


News Serviceவிண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர். விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார். ராணுவ சிப்பாயாக இருந்த தன் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தார். தாத்தாவின் விடுதியில் தாயுடன் வளர்ந்தார். அங்கேயே பணிப் பையனாக மாறிய அவர், 1587இல் ஒரு செல்வந்தர் அளித்த நிதி உதவி யால் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணித விஞ்ஞானம், வானியல், இசை முதலிய வற்றைப் படித்தார். கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளையும் மதக் கல்வியையும்கூட கற்றார்.
  
படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி
லேயே கஷ்டமான கணக் காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக கெப்ள ருக்கு இந்தக் கஷ்டக் கணக்கு பிடித்திருந்தது. வானியல் பற்றியே அவர் எந்நேரமும் சிந்தித்தார். பல வருட அவதானிப் புக்குப் பிறகு, வானில் கோள்கள் அசை கின்றன.
ஆனால், அவை ஒரு குறிப்பிட்ட விதியின் படி சீராகவே நகர்கின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார். வானியலை ஓர் விஞ்ஞானத் துறையாய் ஆக்கிய பெருமை இவரையே சாரும். தொலை நோக்கியில் ஒளி எவ்வாறு ஊடுருவு கிறது என்பதை ஆய்வு செய்து, இவர் உருவாக்கிய மாதிரி தொலை நோக் கியை ஆதாரமாக வைத்துத் தான் கலிலி யோ தன் முதல் தொலை நோக்கியைப் படைத்தார்.
கணிதத் துறையிலும் கெப்ளர் சாதிக்காமல் விடவில்லை. மிகச்சிறு எண் கணக்கியலை ஆரம் பித்து கால்குலஸ் எனும் துறையைத் துவக்கியவர் இவரே. அதுவே, பிற்காலத் தில் கால்குலஸ் கணிதத் தை வளர்ச்சி அடையச் செய்ய நியூட்டனுக்கு உத வியது. சூரியனை கோள்கள் சுற்றி வருகின் றன என்ற பரிதி மய்யக் கோட்பாட்டை ஆதரித்த கெப்ளர், அதற்காக வான வியல் ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட ஈடுபட, அவரது பார்வைத்திறன் பாதிக் கப்பட்டது. இருப்பினும் விடாது போராடி, கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளை வானியல் துறைக்குத் தந்தார் அவர். கெப்ளர் சில காலம் நோயுற்று 1630ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தனது 59ஆவது வயதில் காலமானார். 1604ஆம் ஆண்டில் அவர் கண்டு பிடித்த புதிய விண்மீனுக்கு கெப்ளர் சூப்பர்நோவா என இப்போது பெயரிட்டி ருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...