
1.7 மைல் நீளம் கொண்ட இந்த ராட்சத பாறை கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் மசாசூசெட்ஸ்சில் உள்ள வின்கோல்ன் தொழில் நுட்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நியூ மெக்சிகோவில் சொகோர்ரோ என்ற இடத்தில் எரிகல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இது கண்டறியப்பட்டது. ஆனால், இந்த கல் பூமியை தாக்காது என்றும் 40 லட்சம் மைல் தொலைவில் இருப்பதால் விலகி சென்றுவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவில் மாற்றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ராட்சத எரிகல்லுக்கு குயின் எலிசபெத்-2 என்று பெயரிட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்று ஒரு எரிகல்லை கண்டு பிடித்தனர். அதற்கு குயின் எலிசபெத் என்று பெயர் வைத்திருந்தனர்.
ஏன் அமரிக்கர்கள் இவ்வாறான கற்களுக்குப் பெயர்களை இங்கிலாந்தில் இருந்து எடுக்கின்றார்கள் என்ற உண்மையை அறிய முடிவதில்லை. அடுத்த கல்லுக்கு "டயானா" என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அன்புடன்
கங்கைமகன்
19.05.2013
No comments:
Post a Comment