வருடா வருடம் சித்திரை மாத வசந்த காலத்தையொட்டி வருவதும், சுப
காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட காலமாக உள்ளதுமான அக்கினி நட்சத்திரம்
(கத்திரி வெயில்) இன்று 4ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம்
திகதி செவ்வாய்க்கிழமை முடிவடைகின்றது.
இந்த அக்கினி நாள் காலங்களில் கிரகப் பிரவேசம், திருமணம் போன்ற சுப
காரியங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நாள்கள் எனவும், நெற் செய்கையில்
ஈடுபடும் விவசாயிகள் (தானிய வகை) நாற்று நடும் வேலைகளை செய்யக் கூடாது
எனவும், நிழல் தரு விருட்சங்களை கத்தி கொண்டு வெட்டி அழிக்கக் கூடாது என
எமது இந்து மத சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டிருப்பதுடன், இயலுமான அளவு
மரங்களை போஷிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கின்றன.
மேலும், ஆசியப் பிராந்தியத்தின் வெப்ப வலைய பகுதிகளில் சூரியனின்
வெப்பம் மிக கடுமையான அளவு இருக்கும். எமது அண்டை நாடான இந்தியாவில் இக்
காலப் பகுதியில் நிலவும் கூடுதலான வெப்பத்தினால் பலர் மரணிப்பதும் சில
பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதும் உண்டு.
இந்த அக்கினி நாள் காலப் பகுதியிலேயே கிழக்கில் கண்ணகி அம்மன்
சடங்குகள் இடம் பெறுவது வழக்கம், அம்மன் சடங்குகள் (வைகாசி பூரணை) இம்
மாதம் 24ஆம் திகதி அக்கினி நாளின் அகோர வெப்பம் குறைவடையும் என்பது எமது
பிரதேச மக்களின் நம்பிக்கையாகவும் இருந்து வருகின்றன.
No comments:
Post a Comment