May 25, 2013

கனடாவில் சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்


அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது.தொடர்ந்து அரிக்கேன் புயல் இப்பகுதியைத் தாக்குவது தெரிந்த தகவல் என்றாலும் நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று கனடா மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள் சாதாரணமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க நிறுவனம் புயல் பற்றிய தனது அறிக்கையில், வருடந்தோறும் ஆறு அரிக்கேன் புயல்களும், மற்ற மூன்று பெரும் புயல்களுடன் மணிக்கு 175 கி.மீற்றர் வரை வீசும் புயல்காற்றும் உண்டு என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...