சிங்கப்பூர் மாசு மண்டலம் 3-வது நாளாக 'அளவு கடந்து' செல்கிறது
சிங்கப்பூரைச் சூழ்ந்துள்ள மாசு
மண்டலம் வயோதிபர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்
அளவுக்கு காற்றினை மாசுபடுத்தியுள்ளது.
மாசு மண்டலத்தின் அளவு இன்று வெள்ளிக்கிழமை நண்பகலின்போது 401-PSI ஐ தாண்டியிருந்தது.தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இந்த அளவு அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக காடுகள் எரிக்கப்படுவதால் இந்த மாசு மண்டலம் உருவாகியுள்ளதாக சிங்கப்பூர் குற்றஞ்சாட்டிவருகிறது.
முடியுமானவரை மக்களை வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்குமாறும் சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சனை சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா இடையே கடுமையான அரசியல் முறுகல்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமது காற்று மண்டலம் மாசடைவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் இந்தோனேசியாவிடம் கேட்டுள்ளது.
இதேவேளை, மலேசியாவிலும் நிலைமை மோசமடைந்துவருகிறது.
அங்கும் ஆபத்தான அளவுக்கு காற்று மாசடைந்துவிட்டதால் சுமார் 300 பள்ளிக்கூடங்களுக்கு அதிகாரிகள் விடுமுறை அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment